தனது இசையால் இந்திய சினிமாவில் யாரும் தொட முடியாத வகையில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்த இசைஞானி Ilaiyaraaja-ன் பிறந்த நாள் ஸ்பெஷல்…
அன்றைய காலகட்டத்தில் தமிழர்களோடும் தமிழோடும் ஒன்றிய பிணைப்பை தனது இசை மூலம் பட்டி தொட்டியெங்கும் பரவ செய்து அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் Ilaiyaraaja. ஒரு மனிதன் சந்தோசம், துக்கம் என எந்த நிலையில் இருந்தாலும் ராஜாவின் இசையை கேட்டு தன்னை மறந்து விடும் அளவிற்கு Ilaiyaraja இசையால் கட்டி வைத்திருந்தார். இசை வாழ்வில் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளில் 1000 படங்களில் 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
1943-ல் தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியில் பிறந்த “ஞானதேசிகன்” என்ற இளையராஜா பள்ளியில் படிப்பதற்காக “ராஜய்யா” என பெயரை மாற்றினார் அவரது தந்தை. குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டார். சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட ராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் ராஜய்யா என்ற பெயரை “ராஜா” என மாற்றி வைத்தார்.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வந்த “அன்னக்கிளி” படத்தில் Ilaiyaraaja-வை இசையமைக்க வைத்தார். ராஜா என்ற பெயரை “இளையராஜா” என பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தான் மாற்றினார். இந்தியா திரைப்படங்களில் மேற்கத்திய இசையை கொண்டு வந்து தமிழ் சினிமா உலகில் “MAESTRO” என புகழப்பட்டார்.
தனது பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதி. ஆனால் ஜூன் 2-ஆம் தேதி தான் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் Ilaiyaraaja. இதற்க்கு காரணம் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தேதி ஜூன் 3. இளையராஜா அவருக்கு “இசைஞானி” என்ற பட்டம் தந்து பாராட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவரின் மீது உள்ள பற்று காரணமாக ஜூன் 2-ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இளையராஜா.
தூக்கம் வரவில்லை என்றாலும், நீண்ட தூர பயணம் என்றாலும் எல்லா வித சூழ்நிலையிலும் இளையராஜாவின் இசையால் மெய்மறந்து கேட்கும் அளவிற்கு இசையால் கட்டி போட்டுள்ளார். “ராஜா ராஜா தான்” என்ற அளவிற்கு தமிழ் மொழி இசையை உலகளவில் கொண்டு வந்து சேர்க்கும் அளவிற்கு இசை நுணுக்கத்தாலும், இசை திறமையாலும் இசையுலகமே அவரை கொண்டாடி வருகிறது.

இந்திய அரசால் 2010-ல் பத்ம பூஷன் விருதும், 2018-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி இளையராஜாவை கௌரவப்படுத்தப்பட்டது. மேலும் ராஜ்ய சபைவில் MP ஆக 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 முறை தேசிய விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும், நந்தி விருது, பிலிம்ஃபேர் விருது, கேரளா அரசின் விருது, தமிழக அரசு விருது, சங்கீத நாடக அகாடமி விருது என இவரது இசை சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டில், 165 நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் BBC நடத்திய கருத்துக் கணிப்பில் 1991-ஆம் ஆண்டு வெளியான “தளபதி” திரைப்படத்தில் ராஜா இசையில் வெளியான “ராக்கம்மா கைய தட்டு” பாடல் அனைத்து காலத்திற்கும் மிகவும் பிரபலமான முதல் 10 பாடல்களில் நான்காவது இடத்தைப் பிடித்தது.
2013-ஆம் ஆண்டு இந்தியச் செய்திச் சேனலான CNN-IBN இந்திய சினிமாவின் 100-ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் இளையராஜா 49% மக்களின் வாக்குகளைப் பெற்று நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவிற்கு இசையால் நாடு முழுவதும் பரவியிருந்தார் இளையராஜா.
இந்திய சினிமாவின் இளையராஜா தான் முதன் முதலாக தனது பாடல்களில் ஆப்பிரிக்க பீட்களை பயன்படுத்தினார். இந்திய-ஆஸ்திரேலிய இயக்குனரான ஜூலியன் கரிகாலன் இயக்கிய “LOVE AND LOVE ONLY” என்ற காதல் திரைப்படத்தின் மூலம் இளையராஜா ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ.என்.வி.குருப், ஸ்ரீகுமரன் தம்பி, வெட்டூரி, ஆச்சார்யா ஆத்ரேயா, சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரி, சி. ஆகிய இந்தியா அளவில் உள்ள கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மேலும் உதயசங்கர் மற்றும் குல்சார். பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன், மகேந்திரன், பாலுமகேந்திரா, கே.பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திகாட், பிரியதர்ஷன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாச ராவ், பாலா, ஷங்கர் நாக், போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோரால் பாடப்பட்டன.
கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக இசையால் இந்தியா சினிமாவை உலக அளவில் தலைநிமிர செய்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]