ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பள்ளிகள் விடுமுறை என்பதால் நிறைய தமிழ் படங்கள் திரைக்கு வர இருக்கிறது.இதில் முன்னனி நடிகர்களான கமல்,சூர்யா படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.இதனால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.திரைக்கு வர இருக்கும் புதுப்படங்களைப் பற்றியும் அதில் நடித்துள்ள நடிகர்கள், ரிலீஸ் தேதி பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இந்தியன்2

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்2 படம் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.கமல்ஹாஸன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார்.சமுத்திர கனி,சித்தார்த்,நெடுமுடி வேனு,ராகுல் பிரித்சிங்,ப்ரியா பவானிசங்கர் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.பாடல்களும் பின்னணி இசையும் அனிருத் இசையில்,ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கிய உள்ளது.இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கங்குவா

கங்குவா ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.இது ஃபேண்டஸி திரைப்படம் என்று கூறுகிறார்கள்.சிறுத்தை சிவா இயக்கத்தில் மற்றும் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது.இது நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமாகும்.இதில் நடிகர் சூர்யா 6 வேடங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் அறிமுக நாயகிகளாக பாபி தியோல் மற்றும் திஸா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஒரு பெண் 1678 ல் நோய்வாய்ப்பட்டு இறந்து போன ஓர் போர்வீரைப் பற்றி ஆய்வு செய்யும் திரைப்படம் ஆகும்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இது 10 மொழிகள் மற்றும் 3d ல் திரையிடப்பட்டுள்ளது.இதன் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
ரோமியோ

விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கிய தமிழ் தெலுங்கு இருமொழி திரைப்படம் ரோமியோ.விஜய் ஆண்டனி காதல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் மிரளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
குட் ஈவில் புரொடக்சன்ஸ் பேனரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ரோமியோ குட் ஈவில் தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக திரைப்படம்.
மங்கை

மங்கை என்பது பெண்களின் பயணம் என்னும் டேக்லைனில் பெண்களின் அனுபவங்கள் மற்றும் பயணங்களைப் பற்றி கூறும் ஒரு திரைப்படம்.குபேந்திரன் காமாட்சி இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம்.ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் JSM தயாரிப்பில் கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெண்களின் தற்போதைய நிலையை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளதால் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்படம் ஏப்ரல் 1அன்று திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.
இங்க நான் தான் கிங்கு

இங்க நான் தான் கிங்கு ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியலயா, தம்பி ராமையா. மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்தள்ள திரைப்படம்.
இப்படத்தை சுஷ்மிதா அன்புச் செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தஇசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவாகியுள்ளது.ஏப்ரல் 14 அன்று திரைக்கு வர இருக்கிறது.
அரண்மணை4

அரண்மணை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் நகைச்சுவை ஹாரர் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப்,ராசிக் கண்ணா,கோவை சரளா,யோகி பாபு,வி.டி.வி.கணேஷ், டெல்லி கணேஷ் மற்றும் சிங்கம் புலி ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.
இப்படம் அரண்மனை திரைப்பட வரிசையில் இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஹிப்ஹாப் தமிழா இசையில் ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்புடன்,அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ் குஷ்பு தயாரித்துள்ளார். படம் ஏப்ரல் 2024 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
எலக்சன்

எலக்சன் திரைப்படத்தை இயக்குனர் தமிழ் இயக்கி உள்ளார்.இதில் உறியடி விஜயகுமார் மற்றும் ப்ரித்தி அஸ்ராணி முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பில், தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் உருவாகியுள்ளது.ஏப்ரல் 14ல் திரைக்கு வர இருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]