Home Cinema News தமிழ் சினிமாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய த்ரில்லர் படங்கள். 

தமிழ் சினிமாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய த்ரில்லர் படங்கள். 

த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் மக்களிடம் நல்ல​ எதிர்பார்ப்பு இருக்கும். அதில் தமிழ் சினிமாவில் கட்டாயம் பாற்க்கவேண்டிய​ த்ரில்லர் படங்கள் பட்டியல்.

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் பொதுவாக எல்லா ஜானர் படங்களையும் விரும்பி பார்க்கும் ரசிகர்கள் உண்டு. இருப்பினும் Thriller ஜானர் படங்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதற்கு காரணம், ஒரு நல்ல த்ரில்லர் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக சென்று ஆடியன்ஸை சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத த்ரில்லர் படங்களின் பட்டியல் இது. 

ஆரண்ய காண்டம் (2010) 

Aaranya Kaandam movie

தமிழ் சினிமா ரசிகர்களால் வெளியாகி ஆண்டுகளுக்குப் பின் கல்ட் படமாக அங்கீகரிக்கப்பட்ட படம் ‘ஆரண்ய காண்டம்’. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய முதல் படம், அவரின் தனித்துவமான கண்ணோட்டத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம். உலக சினிமா ரசிகர்களால் ‘Neo Noir’, அதாவது சிக்கலான திரைக்கதை, அதிக வன்முறை, இயல்பான ஆக்ஷன் படங்களின் சாயல் இல்லாத படம் என கூறுகிறார்கள். 

நன்மை தீமை என தெளிவான பிரிவை பேசாமல், நிஜத்தில் உள்ள சாமர்த்தியமான பாத்திரங்களையும், ஏமாளிகளையும் கதையின் பாத்திரங்களாக கொண்ட படம் தான் ‘ஆரண்ய காண்டம்’. ஒரு பெண்ணின் கணிக்க முடியாத திட்டத்தில் சிக்கி, அவரவரின் ஆசை, வன்மம், கோபம், விசுவாசம் என பல உணர்ச்சிகளால் முடிவை தேடும் ஆண்களின் கதை. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.5/10.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) 

Onaayum Aattukuttiyum thriller movie poster

இயக்குனர் மிஷ்கின் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த Thriller படம், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. மிஷ்கினின் படங்களில் வெளிப்படையாக தெரிவது எதுவும் உண்மையில்லை, வெளிப்படும் நேரமும் சூழ்நிலையும் தான் படத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் சேர்க்கும். அப்படியான படம் தான் இது. இந்த படமும் ஒரு ‘Neo Noir’ படமாக தான் எடுக்கப்பட்டது. 

இந்த படத்தில் ‘ஓநாய்’ என்று குறிப்பிடப்படும் பாத்திம் உண்மையில் யார்? மிஷ்கின் சொல்லும் மனதை உருக்கும் கதை என இந்த படத்தில் எதிர்பார்க்காத பல திருப்பங்களும், நீண்ட காட்சிகளில் தத்துவம் கலந்த வசனங்கள் என இது ஒரு அக்மார்க் மிஷ்கின் படம். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.1/10.

சதுரங்க வேட்டை (2014) 

Sathuranga Vettai movie poster

இயக்குனர் H. வினோத்தின் முதல் படம், மிகவும் வித்தியாசமான கதையை தமிழில் அறிமுகப்படுத்தி ஹிட்டானது. அற்புதமான திரைக்கதையை எழுதி, அதில் ரசிகர்களால் ஒத்துக்கொள்ளும் உண்மை சம்பவங்களை சேர்த்து எடுத்திருப்பதால் படத்தில் நகைச்சுவையும் கலந்து Thriller- என்டர்டெயின்மென்ட் படமாக அமைந்தது ‘சதுரங்க வேட்டை’. 

நடிகர் நட்டி நடராஜன் உடைய நடிப்பிற்கு குவிந்த பாராட்டும், படத்தில் அவரிடம் தொடர்ந்து ஏமாறும் பலரையும் ஆராய்ந்து ‘தன்னை ஏமாற்றுகிறார்கள் என தெரியாமல் அறியாமையால் இருப்பது அந்த மக்களின் தவறு’ போன்ற பிரபல வசனங்கள் பல நாட்கள் பேசப்பட்டது. நடிகர் நடராஜரின் பாத்திரம் செய்யும் ஏமாற்று வேலைகளை தாண்டி பொதுவாக தள்ளுபடி அல்லது இலவச பரிசு என்ற பெயரில் தினசரி மக்கள் கடந்து வரும் சரண்டல்களையும் போட்டு உடைத்து படம். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.1/10.

துருவங்கள் பதினாறு (2016) 

Dhuruvangal Pathinaaru movie poster

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வருகையை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரவலாக அறிவித்த படம் ‘துருவங்கள் பதினாறு’. படத்தின் முதல் காட்சியில் தொடங்கி அடுத்தடுத்த ஒவ்வொரு frameலும் ஏதாவது ஒரு முக்கியமான தடயத்தையோ பாத்திரத்தையோ பதுக்கி ஒரு சிறப்பான Thriller படத்தை தந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். பெரும்பாலும் புதுமுகங்களை கொண்டு எடுத்த படத்தில் நடிகர் ரஹ்மான் அவருடைய அனுபவத்தின் மிக முக்கியமான நடிப்பை பதிவு செய்துள்ளார். 

‘வாழ்க்கை கணிக்க முடியாதது’ என ஆரம்பித்து படத்தில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் போது பார்வையாளரும் அதில் ஒரு பங்காக உணர்வது, படத்தின் பலம். ஒரு கொலை, அதை மறைக்க மற்றொரு கொலை என இயல்பான thriller படத்தின் பாதையை தவிர்த்து ஒரு நல்ல விறுவிளுப்பான படத்தை தந்துள்ளார்கள். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.2/10.

ராட்சசன் (2018)

Ratsasan movie review edited 1

அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் சீரியல் கில்லரால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் இக்கொலைகளை செய்வது யார்? என்பதை எப்படி கண்டுபிடித்தார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி அசத்தியிருப்பார் இப்படத்தின் இயக்குநர் ராம் குமார். இதற்கு முன்பு ராம்குமார் இதே விஷ்ணு விஷாலை வைத்து எடுத்த ‘முண்டாசுப்பட்டி’ பக்கா காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ராட்சசன்’ படத்துக்கான IMDB ரேட்டிங் 8.3/10. த்ரில்லர் பட ரசிகர்களே இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

யுத்தம் செய் (2011)

p10885242 v h9 ab edited

அடுத்தடுத்து மக்கள் அதிகம் நடமாடும் பீச் மற்றும் பார்க்கில் வைக்கப்படும் ஒரு அட்டை பெட்டியில் இரண்டு வெட்டப்பட்ட கைகள் கிடைப்பது. சிபி-சிஐடியான சேரன் இக்கைகள் யாருடையது, இதை வைப்பது யார்? என்பதை எப்படி கண்டுபிடித்தார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி அசத்தியிருப்பார் இப்படத்தின் இயக்குநர் மிஷ்கின். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.9/10. த்ரில்லர் பட ரசிகர்களே இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

தடம் (2019)

201808051644502523 Thadam Movie Preview SECVPF edited

ஒரு வீட்டில் ஒரு கொலை நடப்பது. போலீஸுக்கு அக்கொலையை செய்தது அருண் விஜய் (கேரக்டர் பெயர் : எழில்) தான் என்பதற்கான ஆதாரம் கிடைப்பது. அதை வைத்து அவரை பிடித்து விசாரிக்கையில், இன்னொரு அருண் விஜய் (கேரக்டர் பெயர் : கவின்) என்ட்ரியாகுகிறார். இதற்கு பிறகு இக்கொலையை செய்தது எழிலா? கவினா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி அசத்தியிருப்பார் இப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி0. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.1/10. த்ரில்லர் பட ரசிகர்களே இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

தெகிடி (2014)

28mp Thegidi

டிடெக்டிவ்வான அசோக் செல்வன், தன் காதலி ஜனனி உட்பட சிலரின் தகவல்களை சேகரித்து அவர் பணிபுரியும் ஏஜென்சிக்கு கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் யாருடைய தகவல்களை சேகரித்தாரோ, அவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அதன் பிறகு அசோக் செல்வன்  இக்கொலைகளை செய்வது யார்? என்பதை எப்படி கண்டுபிடித்தார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி அசத்தியிருப்பார் இப்படத்தின் இயக்குநர் பி.ரமேஷ். இது இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.6/10. த்ரில்லர் பட ரசிகர்களே இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

போர் தொழில் (2023)

291143 portholil

அடுத்தடுத்து பெண்கள் சீரியல் கில்லரால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸ் அதிகாரிகளான சரத்குமாரும், அசோக் செல்வனும் இக்கொலைகளை செய்வது யார்? என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி அசத்தியிருப்பார் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இது இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8/10. த்ரில்லர் பட ரசிகர்களே இப்படத்தை ‘சோனி லைவ்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.