Home Cinema News மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் ரெடியாகும் ‘TRAIN’ படத்தின் மியூசிக்கல் அப்டேட்!

மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் ரெடியாகும் ‘TRAIN’ படத்தின் மியூசிக்கல் அப்டேட்!

விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' படத்துக்கு இசையமைத்து, இயக்கி வருகிறார் மிஷ்கின்.

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் புதிய படம் ‘ட்ரெயின்’ (Train).
இந்த படத்துக்கு இசையமைத்து, இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதனை அதிக பொருட்செலவில் கலைப்புலி.எஸ்.தாணுவின் ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

Train 1

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் டிம்பிள் ஹயாத்தி, கணேஷ் வெங்கட்ராமன், ரேச்சல் ரெபெக்கா, செல்வா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதன் ஷூட்டிங் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலை மிஷ்கினே பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.