தென்னிந்திய நடிகர் சங்கம், சென்னையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை காட்டும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் பிரபல தமிழ் நடிகர்கள் பலர் இதற்கு நன்கொடை அளித்துள்ளனர்.

கடந்த ஞாயிறு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பல தரப்பட்ட பிரச்சனைகள் மற்றும் முடிவுகளை எடுக்க முக்கிய சங்க நிர்வாகிகள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் சங்க புது கட்டிட பணிகளை பற்றி பேசப்பட்டது.
நடிகர் சங்கம் கட்டிடம் துவக்கம் – பாண்டவர் அணி
2017ல் நடிகர் விஷால் தலைமையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் காட்டும் பணிகளை தொடங்க முடிவெடுக்கபட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் நிதி பற்றாக்குறை, கொரோனா பாதிப்பால் எழுந்த தடை மற்றும் தயாரிப்பாளர் உடனான சட்ட சிக்கல்கள் என பல தடங்கல் காரணமாக இந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

2024 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடரப்பட்ட நடிகர் சங்கம் கட்டிட பணிகளில் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், பொது செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணை செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டனர்.
நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகர்களின் நன்கொடை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கமல் ஹாசன் நடிகர் சங்கம் கட்டப்போகும் புதிய கட்டிடத்திற்காக, மார்ச் மாதம் 1 கோடி ருபாய் நன்கொடை அளித்தார். இதற்கு முன் நடிகரும் தற்போதைய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பங்காக 1. கோடி ருபாய் நன்கொடை வழங்கினார்.

இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய இல்லத்தில் நடிகர் சங்கத்தின் பொது செயலாளர், பொருளாளர் மற்றும் துணை செயலாளரை சந்தித்து 1 கோடி ரூபாய் சங்க நிதியாக வழங்கினார். பொருலாளர் கார்த்தியும் சங்கத்தின் தொண்டுக்கு அவரின் சொந்த நிதியாக 1 கோடி நன்கொடை அளித்தார்.

பிரபல தமிழ் நடிகர் நெப்போலியன் அவர்களும் 1 கோடி நிதி தந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் தனிப்பட்ட நிதியாக 50 லட்சம் நன்கொடையாக அளித்து உதவியுள்ளார்.
இவரை போலவே மேலும் பல திரை பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்து வந்தனர். நடிகர் விஜய் தன்னுடைய தரப்பில் இருந்து 1 கோடி ருபாய் கட்டிடம் காட்டும் பொருட்டு கொடையாக கொடுத்தார். இதை பற்றி சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுந்தது.
Wishing my darling forever and my dearest inspiration #Vijay, a very happy birthday.
— Vishal (@VishalKOfficial) June 22, 2024
May you always inspire like how u inspired me which you will definitely do through not just your movies but by the way you conduct yourself and continue your journey as an actor.
Wish you all the… pic.twitter.com/5tuQ8S2yz4
இதற்கு பதிலளித்த நடிகரும் சங்கத்தின் பொது செயலாளருமான கார்த்தி, நடிகர் விஜய் நன்கொடையாக தான் கொடுத்தார், அவரிடமிருந்து கடனாக எதுவும் பெறவில்லை என தெளிவு படுத்தினார். இந்த தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாகவும், அதனால் இந்த கட்டிட பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் தொல்லை நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை. நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.
நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட இனைந்து நடிக்கும் ரஜினி- கமல்
ஞாயிறு நடந்த நடிகர் சங்க பொது கூட்டத்தில், நடிகர் கார்த்தி மேல் கூறிய நன்கொடைகள் பற்றி பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த் ஆவர்கள் கட்டிடம் கட்ட நிதி திரட்ட கமல் ஹாசனுடன் நடிக்க தயார் என்று கூறியதாக பத்திரிக்கரையாளர்களிடம் தெரிவித்தார். நிதி திரட்ட நாடகம் போட்டு, வெளிநாடுகளுக்கு சென்று காலை நிகழ்ச்சிகள் நடத்துவது ஏற்கனவே கையில் எடுக்கப்பட்ட யுக்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]