நடிகர் நாகசைதன்யா மற்றும் பிரபல நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து, பின்னர் 3 வருடங்களுக்கு முன் விவகாரத்து செய்தார்கள். தற்போது இரண்டாம் கலயாணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார் நாக சைதன்யா.
தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக நடித்துவருபவர் நடிகை சமந்தா. ஐவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் ரசிகர்களுக்கும் இது ஒரு பெரிய கொண்டாட்டமாக இருந்தது. இதற்கிடையில் 2021ம் ஆண்டு மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து செய்து அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்தனர்.

இந்த திருமண முறிவுக்குப்பின் நடிகர் நாக சைதன்யா வளர்ந்து வரும் நடிகை சோபிதா துளிபாலாவை காதலித்து வந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர். இருவரும் பல மாதங்களாக காதலித்து date செய்துவந்தது வலைத்தளத்தில் பரவி பெரிதாக பேசப்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் தங்களின் காதலை அடுத்தக்கட்டதுக்கு எடுத்து சென்றுள்ளனர். நடிகர் நாக சைதன்யாவின் வீட்டில் இன்று காலை இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற செய்து கிடைத்துள்ளது. இதை நடிகர் Naga Chaitanyaவின் தந்தை பிரபல நடிகர் நாகார்ஜூனா தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் ‘என் மகன் Naga Chaitanya மற்றும் சோபிதாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி’ என்றும் இந்த நிச்சயதால் எண்கள் வீட்டுக்கு மருமகளாக சோபிதா வருவதில் பெருமகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டுள்ளார் நாகார்ஜுனா.
‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் character வீடியோ ரிலீஸ்!
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்து வந்தார். பல பொது மேடைகளில் இருவரின் விவாகரத்துக்கு பின் சோகமாக காணப்பட்டார் நடிகை சமந்தா. இந்த செய்தி இபோது வெளியானதும் நடிகை சமந்தாவின் ரசிகர்கள் அவரின் பெயரை வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]