90’S கிட்ஸ் ரசித்து கொண்டாடிய படமான ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நாகர்ஜுனா தற்போது மீண்டும் தனுஷ், ரஜினிகாந்த் படங்களில் நடிக்க நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் விக்ரம் படத்தின் மூலம் 1986 -ல் அறிமுகமான நாகார்ஜூனா தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வந்தார். 1997 -ல் ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நாகார்ஜூனா பயணம், தோழா போன்ற தமிழ் படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள குபேரா படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கூலி படத்தின் நடிகர்கள் அப்டேட் குறித்து வெளியாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.
நேற்று மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த Soubin Shahir தமிழில் முதலில் கூலி படத்தில் எண்ட்ரி தரவுள்ளார் என பதிவிட்டிருந்தார்.
Kicked to have King @iamnagarjuna sir joining the cast of #Coolie as #Simon 💥💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 29, 2024
Welcome on board and wishing you a very happy birthday sir🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/Vv7wqA25VA
தற்போது நாகர்ஜூனாவின் பிறந்த நாளை Coolie படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக புகைப்படம் X தளத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். கையில் வாட்ச் கட்டிக்கொண்டு சிகப்பு நிற துணியை கையில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக அமர்ந்து இருக்கும்படி போஸ்டர் உள்ளது.
கூலி படத்தில் Simon என்ற பெயரில் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதுவரை நாகார்ஜூனா தமிழில் நடித்த 3 படங்களும் ரசிக்கும் படியாக நிலையில் இந்த படத்திலும் இவரது நடிப்பு கவனிக்கும் படியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.