வாஸ்கோடகாமா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது First சிங்கள் பாடலான “My Life My Rules” -யை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
RG. கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்திருக்கும் “வாஸ்கோடகாமா” படத்தின் தகவல்கள் சில நாட்களாக பேசப்பட்ட நிலையில் அண்மையில் “வாஸ்கோடகாமா” படத்திற்கான ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது புது வித காமெடி கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாய்ஸ் படத்தில் 5 பேரில் ஒருவராக சினிமாவில் அறிமுகமாகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்த கோட்டை, வல்லினம் போன்ற படங்கள் நடித்திருந்தார். பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நகுல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் ரசிக்கும் படியாக நடித்திருப்பார்.
நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராக அந்நியன்(காதல் யானை வருகிற ரெமோ), வேட்டையாடு விளையாடு(மஞ்சள் வெய்யில், கற்க கற்க) படத்தில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். குத்துப்பாட்டிற்கு புகழ் பெற்ற “நக்க முக்க” பாடலையும் பாடியுள்ளார். மேலும் ஸ்டார் விஜய், ஜீ தமிழ் போன்ற டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்தார்.

தற்போது அவர் நடித்து வெளிவர காத்திருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் First சிங்கள் “My Life My Rules” என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டு படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
RG. கிருஷ்ணன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் தயாரிப்பில், அருண் இசையில் நகுல், கே.எஸ்.ரவிக்குமார் , ஆர்த்தனா பிந்து , மன்சூர் அலிகான் , ஆனந்தராஜ் , முனீஸ்காந்த் , ரெடின் கிங்ஸ்லி , படவா கோபி போன்றோரும் நடித்துள்ளனர்.
ட்ரைலரில் வித்தியாசமான முறையில் குடிப்பது, சமூகத்திற்கு தொந்தரவு தருவது என உறுதிமொழி எடுக்கும் காட்சிகள், அயோக்கிய வாசிகள் குடியிருப்பு பகுதி என்று போர்ட் வைப்பது போன்றவற்றை காமெடியாக சொல்லும் வகையில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Hello Fam!
— Nakkhul (@Nakkhul_Jaidev) July 21, 2024
Here’s the Trailer for #Vascodagama https://t.co/z2gowaHrUx
Hope y’all like it! 🥰💐#divomusic pic.twitter.com/ub1SBkdoVq
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]