நடிகர் ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு‘. இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கும் இந்த படத்தில் பிரபல வலைதள influencers நடித்துள்ளனர். நண்பர்கள் கூட்டத்தில் நடக்கும் ஒரு ஜாலியான கதையாக அமையும் இந்த படத்தின் Jukebox, அதாவது அணைத்து பாடல்களின் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.
https://t.co/KZmPslieAg#NanbanOruvanVanthaPiragu – Full jukebox is out now ❤️
— Ananth (@ActorAnanth) July 29, 2024
We have created the songs of the movie with utmost passion and love !
I believe and hope you will all like our humble work !@imkaashif – My brother is here to stay and go beyond skies !… pic.twitter.com/TJbmMbIUgN
‘காற்றின் மொழி‘ படத்துக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் A. H. காஷிஃப், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு‘ படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் தீம் பற்றி தெரிவித்தது. தற்போது 11 பாடல்கள் கொண்ட தொகுப்பை படக்குழு ஒரே Jukebox விடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்த பாடல்களை பிரபல சினிமா பாடகர்கள் ஹிப்ஹாப் ஆதி, தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா, கி. வி. பிரகாஷ், சூப்பர் சிங்கர் பாடகர்கள் சாம் விஷால், சிவாங்கி கிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் பிக் பாஸ் பிரபலம் அசல் கோலாரு ஆகியோர் பாடியுள்ளனர். இப்படி இளம் பட்டாளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஃபில்ம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. பல படங்களுடன் பெரிய போட்டியாக ஆகஸ்ட் 2ம் தேதி ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]