Home Cinema News சூப்பர் ஹிட்டான ‘பிரேமலு’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ‘பிரேமலு’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

by Sivaanantham RB

மலையாளத்தில் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான படம் ‘பிரேமலு’. ரொமாண்டிக் காமெடி படமான இதனை பிரபல இயக்குநர் கிரிஷ்.ஏ.டி இயக்கியுள்ளார். 

இதில் ஹீரோ, ஹீரோயினாக நஸ்லென்.கே.கஃபூர்மாமிதா பைஜூ நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன்.எம், அகிலா பார்கவன், மீனாக்ஷி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார், அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

premalu

இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்த படம் உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

தற்போது, இந்த படத்தின் மலையாளம் மற்றும் தமிழ் வெர்ஷன் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்திலும், தெலுங்கு வெர்ஷன் ‘ஆஹா’ OTT தளத்திலும் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.