Home Cinema News 2022 ஆண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெறாத தமிழ் படங்கள்!

2022 ஆண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெறாத தமிழ் படங்கள்!

சமீபத்தில் வெளியான தேசிய விருதுகள் பட்டியலில் ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் படங்கள் பல இடம்பெறவில்லை.

by Vinodhini Kumar

சமீபத்தில் 2022ம் ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியல் வெளியானது. இதில் தமிழ் மொழியில் அந்தாண்டு வெளியான பல நல்ல படங்கள் இந்த பட்டியலில் தேர்வாகத்து இணையதளத்தில் விவாதிக்கப்பட்டது. 

2022ல் வெளியான படங்களில் இரண்டு தமிழ் படங்களுக்கு மட்டுமே தேசிய விருதுகள் வழங்கி அங்கீகரித்துள்ளனர். அதில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படங்களுக்கும், மித்ரன் R. ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்கும் மட்டுமே தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

Nithya Menen wins தேசிய விருதுகள் 2024
Source: X (Sun Pictures)

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்கு சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் 2க்கு சிறந்த பின்னணி இசையமைப்பு ஆகிய விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற பாத்திரத்துக்காக நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். 

Part 1 படங்கள் போல​ Part 2 படங்கள் ஹிட் ஆகாதது ஏன்?!

தேசிய விருது பட்டியலில் இடம்பெறாத தமிழ் படங்கள்

கார்கி

Sai Pallavi in Gargi
Source: X (PallaviAlwayz)

சாய் பல்லவி, காளி வெங்கட், R. S. சிவாஜி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கார்கி‘. பாலியல் சீண்டல் பற்றிய தெளிவான திரைக்கதையை படமாக்கி பாராட்டும் பெற்றார் இயக்குனர் கவுதம் ராமசந்திரன். முக்கியமாக நடிகை சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் மிகுதியாக கொண்டாடினர். நித்யா மேனனுக்கு கிடைத்த சிறந்த நடிகை விருது சாய் பல்லவிக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றும் விவாதித்து வருகிறார்கள். 

நட்சத்திரம் நகர்கிறது 

Natchathiram Nagargirathu
Source: X (realJackEason)

பா. ரஞ்சித் இயக்கத்தில் இளம் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன்ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது‘. காதல், சாதி, கலை, ஆணவக்கொலை ஆகிய கருத்துக்களை மிக வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் பேசி, இயல்பான பா. ரஞ்சித் பாணியில் இருந்து மாறி எடுக்கப்பட்ட படம். நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் என அனைவரும் நேர்த்தியாக நடித்து பெரிதாக பேசப்பட்ட படம்.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.