Nayanthara: Beyond the Fairy Tale வெளியீட்டு விவகாரம் சார்பாக நயன்தாரா தனுஷ் இடையே உள்ள கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் அவர்களின் காதல் கதை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடந்த அனுபவங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை பற்றிய ஒரு Documentary ஒன்றாக வெளியிட திட்டமிட்டனர்.
Nayanthara: Beyond the Fairy Tale எனப் பெயரிட்டு பிரபல OTT நிறுவனமான Netflixல் வெளியிட திட்டமிட்டனர். அவர்களின் திருமணம் 2022 நடந்து முடிந்ததும் அதையும் சேர்த்து ஒரு கோர்வையாக documentaryயில் சேர்க்க முடிவெடுத்தனர்.
இதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலில் சந்தித்து பழகிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளையும், அதில் வரும் பாடல்களையும் பயன்படுத்த அந்த படத்தை தயாரித்த நடிகர் தனுஷிடம் அனுமதி கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு நடிகை நயன்தாரா தன்னுடைய சமூக வலைதளங்களில் மூன்று பக்கத்திற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷ் அவர்களை குறிப்பிட்டு அவரைப் போல் அப்பா மற்றும் அண்ணனின் வழிகாட்டுதலில் எல்லாருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்றும், தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய படத்தை தயாரித்த காரணத்தால் அந்த படத்தின் அனைத்து உரிமைகளும் அவருடையது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களை அவரின் Netflix Documentaryயில் சேர்க்க திரும்பியதும், அப்படத்தின் பாடல்களை உபயோகிக்க அனுமதிக்காததும் தனிப்பட்ட வன்மம் காரணமாக தான் என் அவர் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வெறும் 3 விநாடிகள் மட்டுமே அப்படத்தின் பாடல்கள் பயன்படுத்துவதற்கு 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாராவின் பதிவையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷ் பேசிய காணொளியை பதிவிட்டு அதில் அவர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் 2008ல் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் வரும் ‘Local Boys’ பாடலுக்கு சம்பளம் வாங்காமல் நடனமாடிய தை நடிகர் தனுஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்துவந்த நிலையில் இப்படியான கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.