மலையாள திரையுலகில் 2003 ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகை Nayanthara தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தனது ஆற்றல் மற்றும் கடின உழைப்பால் கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக அசூர வளர்ச்சி அடைந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்.
அந்த வகையில் இந்த ஆண்டு படப்பிடிப்பு முடிந்து, திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் நடிகை Nayanthara திரைப்படங்களின் பட்டியல் இதோ!!!
1.Test
சென்னையில் நடக்கும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் உலகம் முட்டிக் கொள்ள அதனால் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் பரபரப்பை சுற்றி நிகழ்வது போல் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.
- நடிகர்கள் – மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின்
- இயக்குனர் – S.சஷிகாந்த்
- இசை – சக்திஸ்ரீ கோபாலன்
- வெளியாகும் நாள் – TBA
2.ராக்காயி
தனது குழந்தையின் பாதுகாப்புக்காக வரவிருக்கும் பெரும் போரை எதிர்நோக்கி காத்திருக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் Nayanthara.
- நடிகர்கள் – நயன்தாரா, சாம்
- இயக்குனர் – செந்தில் நல்லசாமி
- இசை – கோவிந்த் வசந்தா
- வெளியாகும் நாள் – TBA
3.மண்ணாங்கட்டி Since 1960
அறிமுக இயக்குனர் Dude விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் ட்ராமா திரைப்படம் தான் “மண்ணாங்கட்டி Since 1960”. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் விரைவில் வெள்ளித்திரை வருகை தரும் நாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகர்கள் – நயன்தாரா, நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், வினோதினி
- இயக்குனர் – Dude விக்கி
- இசை – ஷான் ரோல்டன்
- வெளியாகும் நாள் – TBA
4.மூக்குத்தி அம்மன் 2
2020 ஆம் RJ பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் Nayanthara அம்மன் அவதாரத்தில் நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
- நடிகர்கள் – நயன்தாரா
- இயக்குனர் – சுந்தர்.C
- இசை – அஜ்மல் கான்
- வெளியாகும் நாள் – TBA
5.கவின் 8
அறிமுக இயக்குனர் விஷ்ணு இயக்கும் திரைப்படத்தில் ரொமான்டிக் இளம் தலைமுறை நடிகர்களில் தனக்கான அடையாளத்தை உருவாக்கி வரும் நடிகர் கவினுடன் லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- நடிகர்கள் – நயன்தாரா, கவின்
- இயக்குனர் – விஷ்ணு இடவன்
- வெளியாகும் நாள் – TBA
6.Dear Students
“Love Action Drama” படத்திற்கு பிறகு நடிகர் நிவின் பாலியுடன் இரண்டாவது முறை மலையாள சினிமாவில் இணைந்துள்ள நயன்தாரா விரைவில் வெள்ளித்திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகர்கள் – நயன்தாரா, நிவின் பாலி
- இயக்குநர் – சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய்
- வெளியாகும் நாள் – TBA
7.MMMN
மலையாள சினிமாவின் ஜாம்பவான்கலான நடிகர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி பல வருடங்களுக்கு பிறகு திரையில் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் உள்ளதை நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அதிகாரபூர்வமாக இணைந்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.
- நடிகர்கள் – நயன்தாரா, மோகன்லால், மம்மூட்டி
- இயக்குநர் – மகேஷ் நாராயண்
- வெளியாகும் நாள் – TBA
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]