Nepotism என்ற வார்த்தை மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து திரைத்துறையில் இந்த nepotism உண்டு. முன்னணி நடிகர்களின் மகன் அல்லது மகளை nepo-kids என்று கூறுவர். குடும்ப பின்னணி கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தாலும் அனைவராலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. மக்கள் ஆதரவு தான் முதன்மை ஆனது. தற்போது உள்ள கால கட்டத்தில் nepo-kids நடிகரோ நடிகையோ திறமையாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துக்கள் அவர்களை பெரிதாக பாதிக்கிறது.
சிபி சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் 2003 ஆம் ஆண்டு “Student Number 1” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார் ஆனால் அவரது தந்தை உடன் நடித்து வெளியான “சக்திவேல் வெற்றிவேல், கோவை பிரதர்ஸ்” தவிர மக்கள் மனதில் வேறு எந்த திரைப்படமும் இடம் பெறவில்லை. தேர்ந்தெடுத்த கதைகள் எதுவும் பெரிதாக கைகுடுக்காததே அவரின் திரைப் பயணத்திற்கான end card ஆக கருதப்படுகிறது. இவரை nepo-kid என்று இன்றளவும் விமர்சித்து வருகின்றனர்.
Thalapathy 69 – விஜயின் கடைசி படத்தின் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் யார்?
விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணம் 2012 ஆம் ஆண்டு “கும்கி” என்ற மாபெரும் வெற்றி படத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் வெளியான “இவன் வேற மாதிரி (2013), அரிமா நம்பி (2014), சிகரம் தொடு (2014)” பிளாக் பஸ்டர் திரைப்படமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. பின்னர் வெளியான படங்களில் மிகவும் வலுவிழந்த கதை மற்றும் திரைக்கதையால் இவரின் திரைப்பயணம் மிக விரைவாக end card சென்றது.
பிரஷாந்த்

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அடுத்த nepo-kid நடிகர் தியாகராஜன் மகனும் கோலிவுட்டின் டாப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் பிரஷாந்த் தான். 1990-ல் அறிமுகம் ஆனா நடிகர் பிரஷாந்த், 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகர் என்று கூறுவர். தளபதி விஜய் கோலிவுட்டில் அறிமுகம் ஆவதற்கு முன் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். Commercial படங்களை தேர்வு செய்யும் முனைப்பில் படத்தின் கதைகளில் கவனம் செலுத்தவில்லை. இதுவே அவரின் திரைப்பயணத்திற்கு அவரே end card போட காரணமாக அமைந்தது.
சக்தி வாசுதேவன்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகி பின்னர் நடிகர் ஆன சக்தி வாசுதேவன், இயக்குனர் P.வாசு அவர்களின் மகன் என்று அனைவரும் அறிவர். “தொட்டால் பூ மலரும்” என்ற ரொமான்டிக் படம் தான் இவரின் முதல் படமாக அமைந்தது. 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் உடன் இணைந்து நடித்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம் நடிகர் சக்திக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தந்தது. படத்தை தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பம் அதோடு 2017-ல் பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் பங்கேற்று அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா

இதயம் முரளி என கோலிவுட் சினிமாவில் அழைக்கப்பட்ட 80-களில் முன்னணி கதாநாயகனின் மகன் நடிகர் அதர்வா 2010-ல் வெளியான “பாணா காத்தாடி” படத்தில் அறிமுகமான மற்றொரு nepo-kid ஆகும். அதர்வா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது “முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012), பரதேசி (2013), ஈட்டி (2015)” போன்ற படங்களே. இந்த திரைப்படங்களுக்கு முன்னரும் பின்னரும் வெளியான எந்த திரைப்படமும் சோபிக்கவில்லை. மற்ற nepo-kids-ஐ போலவே தொய்வான கதைகளை தேர்ந்து எடுத்து தனது சிறப்பான திரை பயணத்திற்கு end card போட்டுக்கொண்டார்.
கார்த்திகா

தமிழில் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் ஆன நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவை தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அறிமுகம் செய்தார். K.V.ஆனந்த் இயக்கத்தில் “கோ” படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆனார் நடிகை கார்த்திகா. அவரின் நடிப்பிற்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும் “அன்னக்கொடி (2013), புறம்போக்கு என்னும் பொதுவுடைமை (2015)” என இரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் கை கொடுக்காத நிலையில் அவர் நடிப்புக்கு அவரே end card போட்டுக்கொண்டு 2023-ல் ரோஹித் மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா அர்ஜுன்

தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றொரு nepo-kid நடிகை, ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகும். ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகளான ஐஸ்வர்யா 2013-ல் “பட்டத்து யானை” திரைப்படத்தில் கதாநாயகி ஆக அறிமுகம் ஆனார். அதன் பின்னே 2018-ல் தனது தந்தை நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் நடித்த “சொல்லிவிடவா” என்ற திரைப்படமும் கைகொடுக்கவில்லை. எனவே தனது திரைப்பயணத்திற்கு end card போட்டுகொண்டு இணைய தளத்தில் கன்டென்ட் போட தொடங்கினார். இந்த வருடம் ஜூன் 10ஆம் தேதி நடிகர் உமாபதியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரசியம் குறைந்த கதைகளை தேர்வு செய்தது, நடிப்பில் பெரிதாக முன்னேற்றம் காட்டாமல் இருந்தது, என பலவிதமான காரணங்களால் அறிமுகமான சில படங்களுக்கு பிறகு end card-ஐ நோக்கி பயணித்தது அவர்களின் திரைப்பயணம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]