தமிழ் சினிமாவில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘பட்டியல்’ அகத்திய படங்களை இயக்கி சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ‘Shershaah’ படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் விஷ்ணு வரதன், அடுத்ததாக தமிழில் ஒரு காதல் படத்தை இயக்கியுள்ளார்.
‘நேசிப்பாயா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 80 மற்றும் 90களில் பிரபலமாக வளம் வந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். இவரது சகோதரர் அதர்வா முரளி ஏற்கனவே தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பரிட்சயமான நடிகராவார்.

ஆகாஷ், முரளி, அதிதி ஷங்கர், நடிகை குஷ்பு, சரத்குமார், பிரபு, கல்கி கெக்கலின், Vikkals விக்ரம், ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. ‘நேசிப்பாயா’ படத்தின் Teaser இன்று வெளியாகியுள்ளது.
XB Film Creators என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தி தயாரிக்க, விஷ்ணு வரதனுடன் ‘பில்லா’ படத்தில் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமாக அமைகிறது.
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!
அர்ஜுன் என்ற பாத்திரத்தில் நடிகர் ஆகாஷ் முரளி நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் தியா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஹிந்தியில் முக்கியமான கதைகளில் நடித்து, தமிழில் ‘பாவக் கதைகள்’ தொடரில் நடித்துள்ள நடிகை கல்கி கெக்கலின் நடித்துள்ளார். ‘நேசிப்பாயா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்திய, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் படமாக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]