Home Cinema News ஜூன் 7 தமிழில் வெளியாகும் படங்கள்! 

ஜூன் 7 தமிழில் வெளியாகும் படங்கள்! 

இந்த ஐந்து தமிழ் படங்களை ஜூன் 7 திரையில் காணத்தவறாதீர்கள்! 

by Vinodhini Kumar

இந்த ஐந்து தமிழ் படங்களை ஜூன் 7 திரையில் காணத்தவறாதீர்கள்! 

அஞ்சாமை 

ஜூன் 7 Anjamai movie

நீட் தேர்வின் பின்னணியும் அதனுடைய நிஜ சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து பல படங்கள் தமிழில் உண்டு. அந்த வரிசையில் அஞ்சாமை படமும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படம். நடிகர்கள் விதார்த், ரஹ்மான், நடிகை வாணி போஜன் நடித்துள்ளனர். அஞ்சாமை இயக்குனர் S P சுப்புராமின் முதல் படமாகும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் திரச்சித்ரம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

வெப்பன்

Weapon movie

சூப்பர் ஹ்யூமன் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம், முழுமையான ஆக்ஷன் படத்தில் நடிகர் சத்யராஜ், வச்ந்த் ரவி, இயக்குனர் ராஜிவ் மேனன், தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மாயா கிருஷ்ணன் நடித்துள்ளனர். அழிக்கமுடியாத சஸ்பென்ஸ் கதாப்பாத்திரத்தில் சத்தியராஜ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார், குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். 

ஹரா

Haraa movie

நடிகர் மோகனின் கம்பேக் படமாக அமையும் ஹரா, சமூக பிரச்சினைகளை தனி மனிதன் தட்டி கேட்கும் ஒரு ஆக்ஷன் படமாகும். நடிகர்கள் மோகன், அனுமோல், யோகி பாபு, சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்கம் விஜய் ஸ்ரீ, தயாரிப்பு கோவை S P மோகன்ராஜ். 

தண்டுபாளையம் 

Dhandupaalayam movie

சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படம் தண்டுபாளையம். நிஜத்தில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும் அதை சுற்றி நடக்கும் கதைதான் தண்டுபாளையம். இந்த படத்தில் இயக்குனர் டைகர் வெங்கட் இணைந்து இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். K T நாயக் இணைந்து இயக்கி உள்ளார். 

இனி ஒரு காதல் செய்வோம்

Ini oru Kadhal Seivom movie

ரொமாண்டிக் படமாக அமையும் இனி ஒரு காதல் செய்வோம் இளம் காதலர்கள், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்கள் பற்றிய படம். புது முகங்கள் நடிக்கும் படத்தை எபிக் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. ஹரிஹரன் எழுதி இயக்கி உள்ளார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.