Home Cinema News ரஜினியின் ‘ஜெயிலர்’ பார்ட் 2-வுக்கு புது டைட்டிலை செலக்ட் பண்ண நெல்சன்… ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் எப்போது ஆரம்பம்?

ரஜினியின் ‘ஜெயிலர்’ பார்ட் 2-வுக்கு புது டைட்டிலை செலக்ட் பண்ண நெல்சன்… ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் எப்போது ஆரம்பம்?

by Naveen Dhayalan
humkum 2

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ ஆகிய 2 படங்கள் இருக்கிறது. இதில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் (மே) முடிவடையப்போகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் ‘தலைவர் 171’ படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கப்போகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் காம்போவில் கடந்த ஆண்டு (2023) வெளியாகி வேற லெவல் ஹிட்டான ‘ஜெயிலர்’ படத்தின் பார்ட் 2 குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு ‘ஹுக்கும்’ (HUKUM) என டைட்டில் சூட்டப்பட்டிருக்கிறதாம். நெல்சன் எழுதி முடித்திருக்கும் இதன் ஸ்க்ரிப்ட் First Draft ரஜினிக்கும், தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’க்கும் பிடித்து விட்டதாம்.

ஆகையால், இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளை வருகிற ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்போகிறாராம் நெல்சன். ஷூட்டிங் இந்த ஆண்டு (2024) டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் துவங்குமாம்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.