Home Cinema News தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – Golden Sparrow பாடல் வெளியானது!

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – Golden Sparrow பாடல் வெளியானது!

தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல், 'Golden Sparrow' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

நடிகர் தனுஷ் இயக்குனராக மூன்றாவது படத்தை இயக்குகிறார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியுள்ள ‘Golden Sparrow’ பாடலுடைய லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. 

Priyanka Mohan in Golden Sparrow

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்‘ – ஒரு வழக்கமான காதல் கதை என்ற டேக் வரியுடன் உருவாக்கி வரும் இப்படத்தில் விசுவாசம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன், இணையத்தில் ‘Oru Adaar Love’ படத்தில் தன்னுடைய முக பாவனைகளால் வைரலாக ப்ரியா பிரகாஷ் வாரியார், மாத்தியூ தாமஸ் ஆகியோருடன் புது முக நடிகர்களான பவிஷ் நாராயணன், ரம்யா ரங்கநாதன், ரபியா கதூன், வெங்கடேஷ் மேனன் நடித்துள்ள காதல் படம் தான் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. 

இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘Golden Sparrow’, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை படத்தின் இயக்குனரான நடிகர் தனுஷ், ஜி வி பிரகாஷ், பாடகர் அறிவு மற்றும் பாடகி சுபலாஹ்ஷினி ஆகியோர் இணைந்து பாடியுள்ளார். நடனக்கலைஞர் பாபா பாஸ்கர் இந்த லிரிக்கல் விடியோவுக்கு நடனம் அமைத்துள்ளார். 

இளைஞர்களை வைத்து தனுஷ் இயக்கம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’!

Golden Sparrow song singers

நடிகை பிரியங்கா மோகன் மடிசார் கட்டிக்கொண்டு இந்த ஜாலியான பாடலுக்கு நடனமாடியுளார். நடிகர் தனுஷ் உடைய மூத்த மகன் யாத்ரா இப்பாடலில் நன்கு ஹூக் வரிகளை எழுதியுள்ள தகவல் சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டானது. பாடகர் அறிவு இப்பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு நடனக்கலைஞர் லியோன் பிரிட்டோ Choreograph செய்துள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.