Gen-zக்களை மையமாக வைத்து நடிகர் தனுஷ் இயக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்தின் second single குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன், சுப்ளாஷினி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், மற்றும் அறிவு இணைந்து பாடிய படத்தின் “first single” ஆன Golden Sparrow பாடல் YouTube, Spotify என அனைத்து music ஆப்பிலும் இன்றுவரை முன்னணி வகித்து வருகிறது. Youtube-ல் இந்த பாடல் 82 மில்லியன் views-களை கடந்து சாதனை படைத்துள்ளது.
Second Single – “Kadhal Fail”
#Neek second single is a Gen-z soup song “ kadhal fail “ pic.twitter.com/aMnebMf0W9
— Dhanush (@dhanushkraja) November 20, 2024
இளைஞர்களை வைத்து தனுஷ் இயக்கம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’!
இதையடுத்து இன்று நடிகர் தனுஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இயக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்தின் Second Single – ‘Kadhal Fail’, நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்றும், இது Gen-Zக்களுக்கான soup song என்றும் அந்த அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் “Golden Sparrow” பாடல் Gen-Zக்களின் love anthem ஆக கொண்டபடுகின்ற நிலையில், இந்த Soup Song இதற்கு முன் வெளியான ‘Why this Kolaveri di’ போல் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – Golden Sparrow பாடல் வெளியானது!
தனுஷின் வெற்றிப் பெற்ற Soup Songs
- Why this Kolaveri di – மூணு
- காதல் என் காதல் – மயக்கம் என்ன
- ஓட ஓட – மயக்கம் என்ன
- மயக்கமா கலக்கமா – திருச்சிற்றம்பலம்
தனுஷ் இயக்கத்தில், பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் நடிக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று வெள்ளித்திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]