நடிகர் தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‘ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண் ,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஒரு ஜாலியான காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது .

‘பா.பாண்டி’,’ராயன்’ என தனுஷ் இயக்கத்தில் வெளியான படங்கள், ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இந்த படத்தின் ட்ரைலரும் அதற்கு நிகராக ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாலியான காதல் கதைக்களம் கொண்டிருந்தாலும் முதல் காதல் பிரிவு, முன்னாள் காதலியின் கல்யாண சோகம் என பல செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்ட ஒரு கதையாக உருவாகி உள்ளது.
#NEEK trailer https://t.co/QiXPdHqFRe #DD3 ❤️❤️❤️
— Dhanush (@dhanushkraja) February 10, 2025
பல இளம் வயது நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் சரத் குமார் மற்றும் சரண்யா பொன் வண்ணன் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பரபரப்பான கதைக்களம், கண் கவரும் காட்சிகள், ஜி வி பிரகாஷின் பாடல்கள் என வழக்கமான தனுஷின் திரைப்பட பாணியில் உருவாகியுள்ள இப்படம் 21 பிப்ரவரி 2025 இல் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இளைஞர்களை வைத்து தனுஷ் இயக்கம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – படக்குழு
நடிகர்கள் | பவிஷ் ,அனிகா, சுரேந்திரன் ,பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ தாமஸ்,வெங்கடேஷ் மேனன்ரபியா கட்டூன்,ரம்யா ரங்கநாதன் ,அன்பு தாசன்,சதீஷ், ஆர்.சரத்குமார்,ஆடுகளம் நரேன்சரண்யா பொன்வண்ணன் |
இயக்குனர் | தனுஷ் |
இசை | ஜி வி பிரகாஷ் குமார் |
தயாரிப்பு | தனுஷ்,கஸ்தூரி ராஜா,விஜயலஷ்மி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]