தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் ஜி.வி பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ல் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான சென்சார் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து, தற்போது இப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு UA 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது மிக்க சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. UA 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்படம் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற படமாக உருவாக்க பட்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாராயண் மற்றும் அனிகா சுரேந்திரனுடன் இணைந்து பல புது முக நடிகர்களும், சரத் குமார் மற்றும் சரண்யா பொன் வண்ணன் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜாலியான காதல் காட்சிகள் இருப்பினும் காதல் தோல்வியால் ஏற்படும் உணர்ச்சிகரமான எமோஷனல் காட்சிகளும் உள்ளன. இருப்படத்தின் ட்ரைலர் மற்றும் பல முன்னோட்ட விடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து இளைனர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பும் ஆவளும் அதிகரித்து வருகிறது.
#NilavukuEnMelEnnadiKobam Censor Complete ✅
— Movie Tamil (@MovieTamil4) February 17, 2025
Duration – 131.59 Mins ⏳ #Dhanush Direction ⬆️ pic.twitter.com/KTJAc2apqo
இப்படத்திற்கான சென்சார் முடிவிற்கு பிறகு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் 2 மணி நேரம் 11 நிமிடம் 59 வினாடி படம் என்ற தகவல் தெரியவந்துள்ளது. தனுஷ் இயக்கி வெளியான பா.பாண்டி மற்றும் ராயன் படத்தை போலவே இப்படமும் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவருவதற்கு முன்பே இளைனர்கள் இப்படத்திற்கு அதிகம் ஆர்வம் கட்டி வருகின்றனர். வரும் பிப்ரவரி 21 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]