இயக்குனர் பிரிட்டோ JB யின் முதல் திரைப்பட இயக்கத்தில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் மார்ச் 7 ல் திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
நிறம் மாறும் உலகில் திரைப்படம் பல்வேறு சாயல்களை கொண்டு தனி தனியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒன்றுடன் ஓன்று சிறு தொடர்பில் இணைத்து காட்டும் படமாக இருப்பதாக ட்ரைலர் மூலம் தெரிகிறது. மேலும் இப்படத்தின் கதை “சில உண்மை சம்பவங்களாலும் நான் கேள்விப்பட்ட மற்றும் நான் அனுபவித்து உணர்ந்த சில நிகழ்வுகளாலும் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட கதை” என்று இயக்குனர் பிரிட்டோ JB கூறுகிறார்.
The trailer of 🔥 intense family drama ♥️ is here.
— pa.ranjith (@beemji) February 19, 2025
Prepare for an 🖤 emotional journey 🤍 congratulations team 💥💥💥#NiramMarumUlagil Trailer Out Now !! https://t.co/gljao5s344 #NiramMarumUlagilFromMarch7
Starring ⭐ @iamsandy_off @rio.raj #NatarajanSubramaniam… pic.twitter.com/ogWN6i9BZ0
இப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு இன்னல்களையும் பெற்றோர்கள் தன் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் அனுதினமும் சந்திக்கும் கஷ்டங்களையும் வெளிக்காட்டும் படமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வாழ்க்கையையும் மக்களையும் குறிக்கும் பல்வேறு வண்ணங்கள் நிறைந்த பல சாயல்களை கொண்ட கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு மனிதர்களும் தங்களது சுயநலத்துக்காக தங்கள் சுய நிறத்தை மாற்றி கொள்வதை சுட்டிக்காட்டுவது போன்று ஒரு கருத்துள்ள கதைக்களத்துடனும் அதற்கு ஏற்ற சரியான ‘நிறம் மாறும் உலகில்’ என்ற தலைப்புடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரிட்டோ JB.
நிறம் மாறும் உலகில் படக்குழு
நடிகர்கள் | பாரதி ராஜா, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், ஏகன், கனிகா, வடிவுக்கரசி |
எழுத்து & இயக்கம் | பிரிட்டோ JB |
தயாரிப்பாளர்கள் | L. கத்தரின் ஷோபா & லெனின் |
இசையமைப்பாளர் | தேவ் பிரகாஷ் ரேகன் |
தொகுப்பாளர் | தமிழ் அரசன் |
வெளியீட்டு தேதி | 7 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]