கோலிவுட்டில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் உருவாகப்போகும் புதிய படம் ‘Dear Exes’. இந்த படத்தை இயக்குநர் காமினி இயக்கவுள்ளார்.
Very happy to launch the Bask Time Theatres and POPter Media Production No. 1 first look #DearEXes#HBDNithyaMenen
— venkat prabhu (@vp_offl) April 8, 2024
Featuring #NithyaMenen#VinayRai, @pnavdeep26, #DeepakParambol, @prateikbabbar
Written & Directed by debutante #Kamini.
Produced by BGN, Aditya Ajay Singh,… pic.twitter.com/CEMXM86RiY
இவர் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இப்படத்தில் முக்கிய ரோல்களில் வினய், நவ்தீப், தீபக் பரம்போல், பிரதீக் பாப்பர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
ஃபேண்டசி ரொமாண்டிக் காமெடி ஜானர் படமான இதனை ‘BASK டைம் தியேட்டர்ஸ் – POPTER மீடியா புரொடக்ஷன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யப்போகிறார்.
தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) நடிகை நித்யா மேனனின் பர்த்டே ஸ்பெஷலாக பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]