நடிகராக உச்சம் தொட்ட தனுஷ் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தன்னை சினிமாவில் அப்டேட் செய்து வரும் நிலையில் சமீபகாலமாக இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
அதன்படி முதல் படமாக பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்த தனுஷ் அதை தொடர்ந்து எடுத்த படம் ராயன். ராயன் படம் ஹிட் அடிக்க அடுத்து இளைஞர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கினார்.
இதனை தொடர்ந்து 4-வது படமாக இட்லி கடை என பெயரிடப்பட்டு அதனை தனுஷ் இயக்குவதாக சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டனர். படத்திற்கு GV. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும், வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
தனுஷ் படத்தில் இதுவரை GV. பிரகாஷ்குமார் இசையமைத்த பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி போன்ற படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்திலும் இவர் தான் இசையமைப்பாளராக உள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததன் மூலம் தேசியவிருது வென்ற நித்யா மேனன் இட்லி கடை படத்தில் தற்போது இணைத்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷ் உடன் டீ கிளாஸ் வைத்து இருப்பதை போல புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
70 வது தேசிய விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றார் AR Rahman!
அருண்விஜய் வில்லனாகவும், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் ஆகியேரும் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் தேனி பகுதியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த கட்ட சூட்டிங் பொள்ளாச்சியில் எடுக்கவுள்ளது.
- தேசிய விருது வென்ற கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை எற்ப்படுத்துகிறது.