Kollywood-ல் பிற மொழி படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது தமிழ் சினிமா உருவான காலங்களில் இருந்து நடந்து வருகிறது. ஆனால் பிற மொழி கதாநாயகர்கள் தமிழில் பேசி நடித்து வெளியாகும் படம் குறைவேயாகும். Kollywood-ல் அப்படி நடித்த பிற மொழி ஹீரோக்களின் முதல் படங்களை காண்போம்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் என்று கருதப்படும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் 1941 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திரையில் தனது வெற்றி பயணத்தை மேற்கொண்டார். தெலுங்கில் 1944ல் வெளியான “ஸ்ரீ சீதா ராம ஜனனம்” படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஹீரோவாக தமிழில் பேசி நடித்து வெளியான முதல் திரைப்படம் “மாயமலை” ஆகும். இந்த படம் 1951-ல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கு மற்றும் சில தமிழ் படங்கள் சேர்த்து மொத்தம் 255 படங்களில் நடித்துள்ளார்.
பிரேம் நசீர்
மலையாள திரையுலகில் கடவுளாக போற்றப்படும் நடிகர் பிரேம் நசீர் ஆவார். 724 படங்களில் ஹீரோவாக நடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் Kollywood-ல் நடித்த முதல் திரைப்படம் 1952-ல் வெளியான “தந்தை” திரைப்படத்தில் தான். இந்த படத்தை M.R.S.மணி அவர்கள் இயக்கியுள்ளார். அதே வருடம் மலையாளத்தில் வெளியான “அச்சன்” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
மம்முட்டி

“மம்முக்கா” என்று மலையாள திரையுலகில் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 400 ஆகும். Kollywood-ல் இவர் நடித்த முதல் படம் 1990-ல் நடிகை அமலா உடன் இணைந்து நடித்த “மௌனம் சம்மதம்” ஆகும். வழக்கறிஞராக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு முழு நேர நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன் லால்
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மோகன் லால் 1997-ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “இருவர்” படத்தின் மூலம் Kollywood-க்கு ஹீரோவாக அறிமுகம் ஆனார். இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர் ஆன நடிகர் மோகன் லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
நாகர்ஜுனா அக்கினேனி

நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மகனும் நடிகரும் ஆன நாகர்ஜுனா நடிப்பில் 1997-ல் வெளியான “ரட்சகன்” படத்தில் ஹீரோவாக நடித்து Kollywood சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் பிரவீன் காந்தி அவர்களால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகி இன்று வரை 90-களில் வெளியான cult கிளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிரஞ்சீவி

டோலிவுட்டின் “மெகா ஸ்டார்” என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “47 நாட்கள்” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். 1981-ல் வெளியான இந்த திரைப்படம் சிவசங்கரி என்ற எழுத்தாளர் எழுதிய “47 நாட்கள்” நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடிகை ஜெய பிரதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயராம்

மிமிக்கிரி கலைஞன் ஆக தொடங்கிய ஜெயராம் அவர்களின் பயணம் கதாநாயகன் ஆக மாறியது 1988-ல் மலையாளத்தில் வெளியான “அபரன்” படத்தில் தான். அங்கிருந்து kollywood-க்கு அறிமுகம் ஆனது இயக்குனர் விக்ரமன் இயக்கிய “கோகுலம்” படத்தில் தான். பானுப்ரியா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த இந்த திரைப்படம் 1993-ல் வெளியானது.
நிவின் பாலி

சினிமாவில் பின்னணி இன்றி ஜெயிப்பது மிகவும் கடினம் ஆனால் அதை தனது தீவிர முயற்சியால் நிறைவேற்றியவர் மலையாள நடிகர் நிவின் பாலி. சொந்த மொழியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டு அதன் பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் “நேரம்” படத்தின் மூலம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்திலும் இதே பெயரில் 2013 ஆம் ஆண்டு வெளியானது.
பிரித்விராஜ் சுகுமாரன்

70-களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சுகுமாரன் அவர்களின் மகன் தான் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகும். 2005-ல் வில்லனாக தமிழில் அறிமுகம் ஆகி பின்னர் 2006 ஆம் ஆண்டு வெளியான “பாரிஜாதம்” திரைப்படத்தில் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆனார். இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இந்த படத்தின் இயக்குனர் ஆகும்.
துல்கர் சல்மான்

மற்றொரு மலையாள நடிகரும், நடிகர் மம்முட்டியின் மகனும் ஆன துல்கர் சல்மான் தமிழில் 2014-ல் “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான “ஓ காதல் கண்மணி” இவருக்கு தமிழில் பல ரசிகைகளை உருவாக்கியது.
மகேஷ் பாபு

தெலுங்கு படங்கள் தமிழில் வெளியாகி எப்போதும் நல்ல வரவேற்பை பெரும். இதன் காரணமாக 2017-ல் தமிழில் நேரடியாக ஹீரோவாக களம் கண்டார் நடிகர் மகேஷ் பாபு. A.R.முருகதாஸ் இயக்கத்தில் “ஸ்பைடர்” படத்தில் நடித்த மகேஷ் பாபு அவர்களின் முயற்சி பெரிதாக கை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
காளிதாஸ் ஜெயராம்

Kollywood சினிமாவில் ஹீரோவாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஆகும். 2016-ல் “மீன் குழம்பும் மண் பானையும்” என்ற பாண்டஸி நகைச்சுவை படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு மேலும் கவனத்தை ஈர்க்க உலகநாயகன் கமல்ஹாசன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சந்தீப் கிஷன்

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சந்தீப் கிஷன் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “யாருடா மகேஷ்” (2013). தமிழில் அவர் நடிப்பில் வெளியான “மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர், ராயன்” போன்ற படங்கள் மிகுந்த பாராட்டுகளை அவருக்கு பெற்று தந்தது.
நானி

“Clap Director” ஆக 2005-ல் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார் நடிகர் நானி. தனது விடா முயற்சியால் ஹீரோவாக தெலுங்கில் 2008-ல் அறிமுகம் ஆனார். தெலுங்கை தொடர்ந்து தமிழில் “வெப்பம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் 2011ஆம் ஆண்டு வெளியானது.
மொழிகளை கடந்து சினிமாவில் பல திரை கலைஞர்கள் தங்கள் தனித்துவதால் மிளிர்ந்து கொண்டு இருக்க இவர்களின் திரைப்பயணம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]