Home Cinema News அக்டோபரில் மோதப்போகும் தமிழ் சினிமாவின் நான்கு பெரிய படங்கள்!

அக்டோபரில் மோதப்போகும் தமிழ் சினிமாவின் நான்கு பெரிய படங்கள்!

அக்டோபர் மாதத்தில் மொத்தவிருக்கும் வேட்டையன், விடாமுயற்சி, அமரன், கங்குவா திரைப்படங்கள்!!

by Sruthi Balasubramanian

அக்டோபர் 2024ல் ஆயுதபூஜை, தீபாவளி என இரண்டு பெரிய பண்டிகைகளுமே வருகிறது. அதனால் இந்த பண்டிகை கால விடுமுறையைப் பயன்படுத்தி பெரிய படங்களை ரிலீஸ் செய்ய எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிபோடுகின்றன. 

ரஜினியின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ இரண்டு படங்களையுமே லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்னும் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடியவில்லை என்றாலும் அக்டோபர் 2024 திரைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது லைகா. இதற்கிடையே கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ படம் அக்டோபர் 31 அதாவது தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். இதில் வேடிக்கை என்னவென்றால் ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’, ‘அமரன்’ மூன்று படங்களின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருப்பது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம். அதனால் மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் ‘விடாமுயற்சி’ படத்தை அக்டோபர் 10-ம் தேதியும், ‘வேட்டையன்’ படத்தை தீபாவளிக்கும் வெளியிட வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் சூர்யாவின் கங்குவாவும், அஜித்தின் விடாமுயற்சியும் நேருக்கு நேர் மோதும்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.