Home Cinema News அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘Once More’! 

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘Once More’! 

இளம் காதலர்களாக அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் படத்துக்கு 'Once More' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பை டீஸருடன் அறிவித்தது படக்குழு.

by Vinodhini Kumar

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் பெயரிடப்படாமல் இருந்த படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘Once More’ என தலைப்பை இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

இதுவரை ஆக்ஷன் கதைகளில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்துவந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது முதல் முறையாக காதல் நாயகனாக நடிக்கிறார். இந்த ‘Once More’ படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்ற இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். 

Once More Arjun Das

நடிகர் அர்ஜுன் தாஸின் பிறந்த நாளான இன்று இந்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் ஒரு டீசர் உடன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகை அதிதி சங்கர் வழக்கம்போல் ஒரு ஜாலியான கதாநாயகியாக இந்த படத்திலும் வருகிறார். பெரிதும் திருமணத்தில் விருப்பமில்லாத சீரியஸான ஹீரோ போல டீசரில் சித்தரிக்கப்படுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். 

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது! 

ஒரு மியூசிக்கல் காதல் படமாக , அழகான படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பது அவரின் பெண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். இந்த படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் 2025 பெப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.