இதுவரை சிவாஜிகணேசன், கமல் ஹாசன் என முன்னணி நடிகர்களின் 10 தமிழ் படங்கள் Oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்போது 6 தமிழ் படங்கள் Oscar விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
6 தமிழ் திரைப்படங்கள்:
- மகாராஜா
- ஜிகர்தண்டா டபுள் X
- ஜமா
- தங்கலான்
- கொட்டுக்காளி
- வாழை
சினிமாவில் Oscar விருது என்பது கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றதற்கு இணையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஆஸ்கார் விருது என்பது கனவாக இருந்து வருகிறது. பல ஆண்டுகள் கனவை நினைவாக்கியவர் நம் தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தான்.
ஒட்டுமொத்த சினிமா உலகிற்க்கே தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை எப்படியாவது பெற வேண்டும் என்பது ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு சினிமா துறைகளில் சிறந்த படைப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவானது ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் பகுதியில் நடைபெறும்.
தமிழ் திரையுலகில் இதுவரை 1969 -ல் வெளியான சிவாஜி கணேசனின் தெய்வமகன் படம்,1987 -ல் கமலின் நாயகன் படம், 1990 -ல் அஞ்சலி படம், 1992 -ல் வெளியான தேவர்மகன் படம், 1995 -ல் வெளியான குருதிப்புனல் படம், 1996 -ல் வெளியான இந்தியன் படம், 2000 -ல் வெளியான ஹேராம் படம், 1998 -ல் வெளியான ஜீன்ஸ் படம், 2015 – ல் வெளியான விசாரணை படம், 2021 -ல் வெளியான கூழாங்கல் படம் என இதுவரை 10 தமிழ் படங்கள் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்துள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் 5 படமும், சிவாஜிகணேசன் நடிப்பில் 1 படமும், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2 படம் இதில் அடங்கும்.
Oscar Academy Library-ல் சேர்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் திரைக்கதைகள்
தற்போது 2024 -ல் வெளியான இந்திய படங்களில் 29 படங்கள் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதில் விஜய் சேதுபதியின் மகாராஜா, ராகவா லாரன்ஸின் ஜிகிர்தண்டா டபுள் X, மாரி செல்வராஜின் வாழை, சூரியின் கொட்டுகாளி, விக்ரமின் தங்கலான், ஜமா என 6 தமிழ் படங்கள் பரிந்துரைரைக்கப்பட்டது.
பிறமொழியான தெலுங்கில் கல்கி 2898 AD, ஹனுமான், மங்களாவரம் என 3 படங்களும், மலையாளத்தில் உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம், ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட் , மற்றும் ஆட்டம் ஆகிய படங்கள் இடம்பெற்றன. அதிகமாக ஹிந்தியில், ஆர்டிகள் 370, அனிமல், லாபதா லேடீஸ் என 12 படங்கள் இடம்பெற்றது. அதே போல் 3 மராத்தி மொழி படமும், ஒரு ஓடியா மொழி படம் என மொத்தம் 29 இந்திய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
மகாராஜா:

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காய்சிப், அபிராமி, மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி ஆகியோர் நடிப்பில் வெளியானது “மகாராஜா”. இப்படம் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வெளியாகி 100 கோடி வரை வசூல் செய்து அசத்தியது.
ஜிகர்தண்டா டபுள் X:

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் X. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் SJ. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஜமா:

பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவான படம் “ஜமா”. அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன், ஏ.கே.இளவழகன் மற்றும் காலா குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தங்கலான்:

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
கொட்டுக்காளி:

“கூழாங்கல்” படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் வெளியான திரைப்படம் கொட்டுக்காளி. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இப்படம் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதையும் வென்றது.
வாழை:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படம் “வாழையடி” என்ற சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]