Home Cinema News Part 1 படங்கள் போல​ Part 2 படங்கள் ஹிட் ஆகாதது ஏன்?!

Part 1 படங்கள் போல​ Part 2 படங்கள் ஹிட் ஆகாதது ஏன்?!

Part 1, Part 2 என படங்கள் 2000 காலகட்டத்திற்கு பிறகு அதிகமாக வர தொடங்கியுள்ளன. இதற்க்கு காரணம் முதல் பாகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து எதிர்பாராத வெற்றியை தந்தது தான் முக்கிய காரணமாக இருந்தது. 

by Sudhakaran Eswaran

Part 1, Part 2 படங்கள் 2000த்திற்கு பிறகு அதிகமாக வர தொடங்கியுள்ளன. இதற்க்கு காரணம், முதல் பாகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து​ எதிர்பாராத வெற்றியை தந்தது தான்.

ஊர் திருவிழா, வீட்டில் விசேஷம், எதாவது பண்டிகை நாட்கள் என்றாலே வாங்க சினிமாவுக்கு போலாம் என்று உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து கிளம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு சினிமா என்பது மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் நேரங்களில் மக்கள் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிளாஸை கட் அடித்தால் வாயில் வரும் அடுத்த வார்த்தை வாடா படத்துக்கு போலாம். பொழுது போக்காக அனைவரின் வாழ்விலும் சினிமா இருந்து வருகிறது. சோகமாக இருக்கும் போதும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும், வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்க, நீண்ட தூர பயணம், பஸ் பயணம் என எல்லா நேரங்களிலும் சினிமா பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 

பெரும்பாலும் 2000 காலத்திற்கு முன்பு வரை சினிமா என்பதை தியேட்டர், தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் ஸ்மார்ட்  போன், லேப்டாப் போன்றவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிக நெருக்கமாக வந்து விட்டது.   

இதனால் சினிமா என்பது மேலும் மக்களுக்கு நெருக்கமானது. OTT தளம், you tube போன்றவை மூலம் நினைத்த நேரத்தில் பார்த்து வருகின்றனர். இது  கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது என்றே கூறலாம். 

Indian 2 poster

சமீப காலமாக Part 2 படங்கள் பெருமளவில் வந்த வண்ணம் உள்ளன. 2000 காலத்தில்  Part 1 படங்கள் வெளியாகும் போது அந்த சமயத்தில் இதற்கான அடுத்த Part வரும் என்ற எண்ணத்தில்  இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்  என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். படம் வெற்றியடைந்த பின்னர் அதே கேரக்டர்களை மையமாக வைத்து வேறு ஒரு கதையில் படத்தை எடுத்திருப்பார்கள்.  

ஆனால் படத்தின்  முக்கியமாக அமைந்தது கதை தான். கேரக்டர்கள் அல்ல. Part 2 படத்தை எடுக்கும் போது முதல் பாகத்தின் எதிர்பார்ப்பை விட அதிகமாக பூர்த்தி செய்யும் என்ற எண்ணத்தில் தான் ரசிகர்கள் பார்க்க வருவார்கள். அப்படி இருக்கும் போது Part 2 படத்தின் கதை  Part 1 படத்தை விட சிறப்பாக இருந்ததா என்றே நினைக்கிறார்கள். 

அப்படி Part 1 படத்தை கம்பேரிசன் செய்யும் போது Part 2 படங்கள் சற்று சுமாராக இருக்கும் போது ரசிகர்கள் அதனை ரசிக்க தவறிவிடுகின்றனர். இதனால் Part 2 படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் போய்விடுகிறது. 

Ponniyin Selvan 2 poster

ஆனால் பொன்னியின் செல்வன், பாகுபலி, சிங்கம், எந்திரன், ஜிகர்தண்டா போன்ற படங்கள் முதல் பாகத்தை விட Part 2 நல்ல வரவேற்பை பெற்றது. இதற்க்கு ஒரு காரணம் முதல் பாகத்தை எடுக்கும் போதே Part 1, Part 2 கதையை தொடர்ச்சியாக கொண்டு சென்றது தான். நீண்ட படத்தை 2 பாகமாக எடுக்கும் போது முதல் பாகத்தில் சஸ்பென்ஸ் கொண்டு முடித்திருப்பார்கள். அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்களின் ஆர்வத்தை இரண்டாவது பாகத்தில் பூர்த்தி செய்யும் படி எடுத்திருப்பார்கள். 

இதனால் Part 2 படங்கள் வெற்றியடைந்தது. மற்றுமொரு காரணம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் வேறு வேறு கேரக்டர்கள், கதையை மட்டுமே மையமாக வைத்து  Part 1 படத்திற்கு சம்மந்தம் இல்லாத வகையில் வேறு ஒரு புது பரிமாணத்தில் படத்தை எடுத்திருப்பார்கள்.   

Sandakozhi 2 poster

முதல் பாகம் வெற்றியடைந்த பிட்ஸா, சண்டக்கோழி, பில்லா, பிச்சைக்காரன், தலைநகரம், சதுரங்க வேட்டை, கோலி சோடா, டார்லிங், கோ, கலகலப்பு, மாரி, சென்னையில் ஒரு  நாள்,ஜெய் ஹிந்த், வெண்ணிலா கபடி குழு, சென்னை 28, சந்திரமுகி, சாமி போன்ற படங்கள் இரண்டாவது பாகத்தில் பெரும் தோல்வியை தழுவின. 

Pizza movie poster

சிங்கம், அரண்மனை, காஞ்சனா போன்ற படங்கள் தொடர்ந்து 3,4 பாகத்திற்கு மேல் எடுக்கும் போது எதாவது ஒன்னு, இரண்டு பாகங்கள் வெற்றியடைந்து விடுகிறது. சிங்கம் படத்தில் போலீஸ், அரண்மனை, காஞ்சனா படத்தில் பேய் என்பதை மையமாக வைத்து அடுத்தடுத்த பாகங்கள் வேறு வேறு சூழ்நிலை, பரிமாணத்தில் எடுக்கும் போது ரசிக்க வைக்கிறது.  

ரசிகர்கள் 2-வது பாகத்தை பார்க்கும் போது முதல் பாகத்தை விட நல்ல இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது Part 2 படங்கள் அதை பூர்த்தி செய்வதில்லை என்றே கூறலாம்.  முதல் பாகத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் சாதாரண மனநிலையில் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது ஒரு சில Part 2 படங்கள் ரசிக்கும் படியாகவே உள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.