ஒரு சிலரின் காம்போ குறைந்த அளவில் படங்களில் நடித்திருந்தாலும் அவர்களது காமெடி என்றும் ரசிக்கும் வகையில் இருந்துவரும். அப்படி பார்த்திபன், வடிவேலு காம்போ காமெடிகள் நகைச்சுவையின் உச்சம் என்றே கூறலாம்.
பார்த்திபன், வடிவேலு கூட்டணியில் வரும் காட்சிகள் எப்படி இப்படி யோசித்து காமெடி செய்கிறார்கள் என்ற எண்ணம் அனைவருக்குமே வரும். பார்த்திபன் கேட்கும் கேள்விகளும், அதற்க்கு பதில் சொல்ல முடியாமல் வடிவேலு தரும் ரியாக்சன் என இவர்கள் காம்போ ரசிக்க வைக்கும்.

இப்படியான கூட்டணியில் வெளிவந்து சிரிக்கவைத்த படங்கள்.
பாரதி கண்ணம்மா:

சேரன் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் “பாரதி கண்ணம்மா”. Parthiban பாரதியாகவும், வடிவேலு ஈனமுத்துவாகவும் நடிப்பிருப்பார்கள். “கையை காலாக நினைச்சு கேக்கற” என்ற டயலாக், அடி உதவுவது மாறி அண்ணன் தம்பி உதவமடங்களா”, இப்படி “குண்டக்க மண்டக்க” பேசுனா எப்படிப்பா, “ஒரு குத்து மதிப்பா சொல்றதுதாப்பா”, என வடிவேலு பேசும் பேச்சுக்கு பார்த்திபன் எதிர் கேள்வி கேட்பது எல்லாம் வேற லெவல். சுளுக்கு எடுக்கும் போது பேசும் பேச்சு அல்டிமேட்.
உன்னருகே நானிருந்தால்:

செல்வா இயக்கத்தில் 1999-ல் வெளியான படம் “உன்னருகே நானிருந்தால்”. “ உன்ன நீயே தூக்கி காமி” என்ற டயலாக், மீனாவை காதலிப்பதாக கூறும் “தேங்க்ஸ்” எனக்குள்ள மனசு, மனசுக்கு வெளிய கண்ணு, கண்ணுக்கு வெளிய பொண்ணு, பொண்ணுக்குள்ள மனசு, மனசுக்குள்ள நானு என்ற டயலாக், குடிக்கும் போது பேசும் டயலாக் என வடிவேலுவிற்கு புரியாமல் பேசும் பேச்சுக்கள், அதற்க்கு வடிவேலு தரும் ரியாக்சன் எப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும்.
காக்கை சிறகினிலே:

P. வாசு இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த படம் “காக்கை சிறகினிலே”. “போகும் போது எங்க போற” என கேட்கும் Parthiban, யாராவது போகும் போது எங்க போறாங்கன்னு கேப்பாங்களா” என்று கூறும் வடிவேலு, “ஆஹா நா என்ன” என்று கேட்கும் பார்த்திபன், “அப்பட நா என்ன”, “சைக்கிளில் காத்து அடித்து விட்டு என் காத்த தா” என பார்த்திபன் கேட்கும் கேள்வி என ரசிக்கும் வகையில் இருவருக்குள்ள உரையாடல் அமைந்திருக்கும்.
வெற்றி கொடி கட்டு:

சேரன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த படம் “வெற்றிக்கொடி கட்டு”. துபாயில் வேலை பார்த்த வடிவேலு, துபாய் சென்றதாக கூறி ஏமார்ந்து போன பார்த்திபனிடம் சிக்கி தவிக்கும் காட்சிகள் தூக்கத்தில் கூட சிரிப்பை வரவைக்கும். தொழில் தொடங்க கையெழுத்து போடுவதற்காக வடிவேலுவை அழைத்து செல்லும் காட்சி, துபாயில் எங்கு இருந்த என பார்த்திபனிடம் வடிவேலு கேட்க அதற்க்கு பார்த்திபன் தரும் கவுண்டர், துபாய் ட்ரெஸ்ஸை துபாயில் தான போடணும் என்று வடிவேலுவின் துணியை எரிக்கும் காட்சி, பஸ்ஸில் காசு இல்லாமல் வடிவேலுவை ஏற்றி விடும் காட்சி என இவர்கள் காம்போ சிரிப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இந்த படம் முழுவதும் காமெடியில் கலக்கியிருந்தனர்.
குண்டக்க மண்டக்க:

அசோகன் இயக்கத்தில் 2005-ல் வெளியான படம் ” குண்டக்க மண்டக்க”. பார்த்திபன், வடிவேலு காம்போவிற்கு ஏற்ற பெயரை படத்திற்கு வைத்துள்ளனர். இளங்கோ, செல்லாவாக பார்த்திபன், வடிவேலு நடித்திருப்பார்கள். “தீப்பெட்டி கேட்கும் போது வெறும் தீப்பெட்டியை மட்டும் தந்து விட்டு” பார்த்திபன் தரும் விளக்கம்,”அண்ணன், தம்பியாக இருக்கலாம் என்று கூறி சரக்கு அடிக்கும் காட்சி, மூளை இல்லாதவனுக்கு எப்படி மூளை காய்ச்சல் வரும், ஒரே நாளில் பணக்காரனாவது எப்படி என்று Parthiban தரும் ஐடியாவிற்கு வடிவேலு செய்யும் செயல், செல்போன்னை திருடி விற்கும் வடிவேலு, அதை காமெடி கலந்து கண்டு பிடிக்க வாய்த்த பார்த்திபன் என படம் முழுவதும் இவர்கள் காம்போ ரசிக்க வைக்கும்.
காதல் கிறுக்கன், நினைக்காத நாளில்லை, புதுமை பித்தன் போன்ற படங்களில் இவர்களது காம்போ குறைவான நேரம் வந்தாலும் காமெடியில் கலக்கியிருப்பார். கவுண்டமணி, செந்தில் காம்போ, சத்யராஜ், மணிவண்ணன் காம்போ போன்று தமிழ் சினிமா உலகில் பார்த்திபன், வடிவேலு காம்போ பெயர் சொல்லும் படியாக இருந்து வருகிறது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இவர்கள் செய்யும் காமெடி எல்லா காலத்திற்கும் ரசிக்கும் படியாக இருந்து வந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]