Home Cinema News ஹீரோவின் பெயரை சொல்லி Atlee’க்கு சவால் விட்ட பேரரசு…

ஹீரோவின் பெயரை சொல்லி Atlee’க்கு சவால் விட்ட பேரரசு…

தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து படத்தை இயக்கி வரும் Atlee க்கு இயக்குனர் பேரரசு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

by John Kamalesh

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் Atlee. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஜெய், நயன்தாரா, ஆர்யா மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

அதன்பிறகு விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்க அந்த படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. 

Snapinsta.app 448433017 18345650875117108 3757567846665082693 n 1024

இப்படி தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து படத்தை இயக்கி வரும் அட்லிக்கு இயக்குனர் பேரரசு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அட்லி தொடர்ச்சியாக பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி எஸ்கேப்பாகி வருவதாக தெரிவித்துள்ளார். 

‘’முடிந்தால் தற்போது வளர்ந்து வரும் நடிகரான கவினை வைத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க சொல்லுங்கள். இது நான் அவருக்கு விடும் சவால்’’ என தெரிவித்துள்ளார். 

மேலும் ‘’விஜய், அஜித்தை வைத்து படங்களை இயக்கிய பிறகு பரத்தை வைத்து பழனி என்ற படத்தை இயக்கி வெற்றி கொடுத்தவன் நான்’’ எனவும் தெரிவித்துள்ளார். 

அட்லி இயக்குனர் பேரரசுவின் சவாலை ஏற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.