ஆரம்பத்தில் துணை கதாநாயகனாவும், தற்போது பல படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் வைபவ் சமீபத்தில் இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில், பெருசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து , சுனில், நிஹாரிகா மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நடிகர்கள் நடித்து நகைச்சுவையான எண்டெர்டைன்ட்மெண்ட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோ ஏற்கெனவே வெளியாகி, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததை தொடர்ந்து, தற்போது ட்ரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தின் ட்ரைலர் வீடியோ மூலம், படத்தில் நடிகர் வைபவின் வயசான தந்தை திடீரென இறந்துவிடுவதை தொடந்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஊர்க்காரர்களிடம் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்க முயற்சிக்கும் போது, நடக்கும் கலாட்டா நிறைந்த பிரச்சனைகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது என அறியலாம். மேலும், அது என்ன விஷயமாக இருக்கும்? எனப் பார்வையாளர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More: Netflix-ல் 2025 ஆம் ஆண்டு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்
ஆரம்ப காலகட்டத்தில், தெலுங்கு படங்களில் நடித்து, அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சரோஜா, கோவா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் வைபவ். மேலும் இவர் நடிப்பில் மார்ச் 7 ம் தேதி ஒரு ஃபேன்டஸி படமாக ஆலம்பனா திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து , அடுத்ததாக இவர் நடிப்பில் மார்ச் 14 ம் தேதி பெருசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Perusu getting a PERIYA release in TN
— Stone Bench (@stonebenchers) March 7, 2025
by @SakthiFilmFctry 🔥#Perusu #PerusufromMar14@actor_vaibhav @sunilreddy22 @ilango_ram15 @kaarthekeyens #HarmanBaweja #HiranyaPerera #Karunakaran #Munishkanth @karthiksubbaraj @sainsasi @JustNiharikaNm @IamChandini_12 @homescreenent… pic.twitter.com/5zPyCiKriM
இப்படம் பார்ப்பதற்கு நல்ல பேமிலி எண்டெர்டைன்ட்மெண்ட் படமாக நகைச்சுவை மற்றும் கலாட்டா நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: வைபவ் நடிக்கும் “Bench Life” வெப் தொடர் ஓடிடியில் வெளியானது!!
பெருசு(Perusu) படக்குழு
நடிகர்கள் | வைபவ், சுனில், நிஹாரிகா, சந்தினி, ரெடின் கிங்ஸ்லி, பாலா சரவணன் |
இயக்குனர் | இளங்கோ ராம் |
தயாரிப்பாளர்கள் | கார்த்திகேயன் எஸ், ஹர்மன் பவேஜா, ஹிரண்யா பெரேரா |
வெளியீட்டு தேதி | 14 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]