இந்திய சினிமாவின் Michael Jackson என்று அழைக்கப்படும் நடன இயக்குனர், நடிகர், மற்றும் இயக்குனர் ஆன பிரபு தேவா கடைசியாக “GOAT” படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் nostalgic அனுபவத்தை கொடுத்தார், அதை அடுத்து அவர் நடிப்பில் “Petta Rap” திரைப்படமும் வெளியாக உள்ளது. 1994-ல் வெளியான “இந்து” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றித் திரைப்படங்களை அவரது 33 வருட திரைப்பயணத்தில் அளித்துள்ளார். இதில் இயக்குனர் மற்றும் நடன இயக்குனராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். 2023-ல் வெளியான “பகீரா” திரைப்படத்தில் கதாநாயகனாக பணியாற்றினார்.
தற்போது செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள “Petta Rap” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் பிரபு தேவா, வேதிகா, பாலிவுட் பிரபலமான சன்னி லியோனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தினில் PK எழுதி S J சீனு இயக்கி உள்ளார். பின்னணி இசை D.இமான் அவர்கள் அமைத்துள்ளார். இந்த வருடம் அவர் இசையில் வெளியாகும் மூன்றாம் திரைப்படம் ஆகும். 1994- ல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “காதலன்” திரைப்படத்தில் இசைப்புயல் AR ரஹ்மான் இசையில் இடம்பெற்ற “Petta Rap” என்ற cult classic பாடலை இந்த படத்தின் தலைப்பு நினைவூட்டுகிறது என்று ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். Petta Rap படத்தில் நடித்துள்ள படக்குழுவின் பெயர்கள் இவை.
ஹிப் ஹாப் தமிழா ஆதி -‘கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரைலர் வெளியானது
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com