வாரிசு அரசியலை போல பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகர்களின் மகன் / மகள் திரைப்படத்துறையில் ஏதேனும் ஒருவகையில் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா 2019-ல் வெளியான “சிந்துபாத்” என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.
வேறு ஒரு புதிய படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகி படப்பிடிப்பு ஓரளவு முடிந்த நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியிருந்தது. படத்தின் பெயர் PHOENIX (பீனிக்ஸ்) எனவும், படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி இருப்பதாகவும் அப்டேட் வெளியானது.
மேலும் பீனிக்ஸ் படத்தை பிரேவ் மேன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. ஷாம் C.S படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு வருடமாக படத்தின் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளை தீவிர படுத்தியுள்ளனர்.
படமானது நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் புதிய போஸ்டர் வெளியிட்ட அறிவித்துள்ளனர். இதில் சூர்யா விஜய் சேதுபதி கோபமாக ரத்த களரியுடன் இருப்பதுபோல புகைப்படம் வெளியானது.
படத்தில் சூர்யா, தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார், சம்பத், முத்துக்குமார், திலீபன் போன்றோர் நடித்துள்ளனர். படத்தின் டீஸர் ஆனது முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்து மாஸ் ஆக இருந்தது. சூர்யாவை மாஸ் ஹீரோவாக முதல் படத்திலேயே அனல் அரசு காட்டியுள்ளார் என தெரிகிறது. கிக் பாக்சிங் விளையாட்டை அடிப்படையாக கொண்டு இருக்கும் படியாக கதை அமைந்தது.
படம் | PHOENIX (பீனிக்ஸ்) |
நடிகர்கள் | சூர்யா, தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார், சம்பத், முத்துக்குமார், திலீபன் |
ரிலீஸ் தேதி | நவம்பர் 14, 2024 |
இயக்குனர் | அனல் அரசு |
இசையமைப்பாளர் | ஷாம் C.S |
படத்தை பற்றி சூர்யா விஜய்சேதுபதி கூறும் போது அப்பா படிக்கும் படத்தின் ஷூட்டிங் பார்க்க செல்லும்போது அனல் அரசு மாஸ்டர் கவனிக்க அதன் மூலம் இந்த படவாய்ப்பு தனக்கு கிடைத்ததாக கூறினார். அப்பா விஜய் சேதுபதியின் பெயரை பயன்படுத்தாமல் “சூர்யா” என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், விஜய் சேதுபதியுடன் ஒன்றாக நடிப்பது குறித்து வரும் காலங்களில் தெரியவரும் என்றும் கூறியிருந்தார்.