புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) அவர்கள், இந்திய இசையின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில், தனது முதல் ஆங்கில செவ்வியல் (Classical) சிம்பொனி “Valiant”-ஐ லண்டனில் உள்ள Eventim Apollo அரங்கில், ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவுடன் இணைந்து நடத்தினார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, மார்ச் 8, 2025 அன்று நடைபெற்றது.
Read More: இசைஞானி இளையராஜாவின் Symphony Orchestra கொண்டு லண்டனில் இசை கச்சேரி!
இதன் மூலம், ஒரு முழுமையான ஆங்கில செவ்வியல் (Classical) சிம்பொனியை உருவாக்கி, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற மிகப்பெரிய சாதனையை இசைஞானி இளையராஜா படைத்துள்ளார். அதன் பின் இவர்க்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இந்தியாவின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Narendra Modi (@narendramodi) March 18, 2025
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது… pic.twitter.com/WAsqFzEzpL
இந்த சந்திப்பின் போது, பிரதமர், “இளையராஜாவின் இசை அறிவு இந்திய கலாச்சாரத்திலும் இசைத்துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டார். மேலும், “Valiant சிம்பொனி நிகழ்ச்சி உலகளவில் இந்திய இசையின் பெருமையை உயர்த்தியுள்ளது என்பதையும், இளையராஜாவின் சாதனைகள் தொடர வேண்டும்” என்பதையும் தெரிவித்தார்.
Read More: இந்திய சினிமாவே கொண்டாடும் “இசைஞானி Ilaiyaraaja” எனும் இசை மாமேதை…
இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja), பிரதமரின் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து, “இந்த வகையான இசை முயற்சிகளை மேலும் தொடர விரும்புகிறேன்” என கூறினார்.
"I proudly announce that Shri Ilaiyaraaja Ji is the first Indian to compose, record and perform live, a full English Classical Symphony Music titled "Valiant", this month in London with the Royal Philharmonic Orchestra on 8th March, 2025. May his legacy continue to inspire, and… pic.twitter.com/TdEoMuQJ2U
— Vice-President of India (@VPIndia) March 18, 2025
மேலும், இந்திய துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவர் திரு ஜகதீப் தன்கர் அவர்கள், பாராளுமன்றத்தில் இசைஞானி இளையராஜாவின் சாதனையை புகழ்ந்து, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். “இந்தியாவின் இசைத்துறைக்கு அவர் அளித்த அர்ப்பணிப்பு மிகப்பெரியது என்றும், இளையராஜா (Ilaiyaraaja) போன்ற நபர்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறார்கள்” என்றும் அவர் பாராளுமன்றத்தில் பாராட்டினார்.
இந்திய இசை வரலாற்றில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இசைஞானி இளையராஜாவின் இசை திறமைப் புகழ் பெற்று வருவது, இந்திய இசைத்துறை வரலாற்றில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]