Home Cinema News Ponram உடன் களமிறங்கும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்.

Ponram உடன் களமிறங்கும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்.

திரையுலகில் கேப்டன் என்று செல்லமாக அழைத்து வந்த விஜயகாந்த் ஆசியுடன் அவரது மகன் சண்முக பாண்டியன் Ponram கூட்டணியில் புதிய படத்தில் பூஜை போடப்பட்டது.   

by Sudhakaran Eswaran

திரையுலகில் கேப்டன் என்று செல்லமாக அழைத்து வந்த விஜயகாந்த் ஆசியுடன் அவரது மகன் சண்முக பாண்டியன் Ponram கூட்டணியில் புதிய படத்தில் பூஜை போடப்பட்டது.   

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக இருந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த். கம்பீரமான பேச்சு, நடை, நடிப்பு என தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக புகழின் உச்சியில் இருந்து வந்தார். கடந்து ஆண்டு உடல்நல குறைவால் மறைந்தாலும் அவரது பெயர் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றது.  

சினிமா, அரசியல் என இரண்டிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் விஜயகாந்த் முக்கியமானவர். அவரின் 72 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சி அலுவலகத்தில் அவரது உருவச்சிலை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

shanmuga pandian
source: instagram

அதில் அவரது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் கலந்து கொண்டனர்.  விஜயகாந்த் ஆசியுடன் சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களின் மூலம் இயக்குனராக பிரபலமான பொன்ராம் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். 

தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை தந்த Ponram அடுத்து இயக்கிய MGR மகன், DSP படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. 

Shanmuga Pandian

2015 -ல் வெளியான சகாப்தம் படத்தின் மூலம் அறிமுகமான சண்முக பாண்டியன் அடுத்து மதுரை  வீரன் படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் பெரிதாக சாதிக்காமல் இருந்து வரும் சண்முக பாண்டியன் மற்றும் வெற்றிப்படங்களை தர வேண்டும் என்று போராடும் பொன்ராம்  ஆகியோர் இணைந்து பணியாற்றும் போது ரசிக்கும் படியாக அமைய வாய்ப்புள்ளது. 

SaveClip.App 457064453 18323981626196249 6211263608697089551 n
source: instagram

மேலும் சரத் குமார், காளி வெங்கட் ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத் குமார் இதற்க்கு முன்பு விஜயகாந்த் உடன் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சந்தன காற்று போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். 

Shanmuga Pandian's next with Ponram

தந்தையுடன் நடித்த நிலையில் தற்போது மகனுடனும் நடிப்பதற்கு சரத்குமார் ஒப்புதல் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது. 

யானை பாகனாக நடித்த “படைத்தலைவன்” என்ற படத்தில் நடித்து முடித்த சண்முக பாண்டியன் வரும் செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து Ponram உடன் பணியாற்றும் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. மேலும் சில நடிகர், நடிகைகள் அப்டேட் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

சமீபத்தில் விஜய் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக GOAT படக்குழுவினருடன் சென்று விஜயகாந்த் குடும்பத்தை சந்தித்தார்.

Shanmuga Pandian and vijay

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.