Pooja Hegde நடித்த படங்கள் சமீபத்தில் ஓரளவு மட்டுமே வரவேற்பு பெற்றாலும் தனது சம்பளத்தை குறைக்காமல் உயர்த்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே சரியான வரவேற்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் நாகா சைதன்யா, அல்லு அர்ஜுன், ஜூனியர் NTR மற்றும் ஹிந்தியில் ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தெலுங்கு, ஹிந்தி சினிமா உலகில் முக்கிய ஹீரோயின் ஆக வலம்வந்தார்.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் “புட்ட பொம்மா புட்ட பொம்மா” என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.
தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருந்த pooja நடிகர் விஜய்யுடன் கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். பீஸ்ட் படத்தில் அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். அரபிக்குத்து பாடலில் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
பிஸியாக நடித்து வரும் பூஜா தற்போது தமிழில் சூர்யா-44 படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் பூஜா ஹெக்டே சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தனது முதல் படமான முகமூடி-ல் 30 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார். தற்போது வரை 3 முதல் 3.5 கோடி வரை ஊதியம் வாங்கி வந்துள்ளார். தற்போது சூர்யா -44 படத்திலிருந்து ஊதியத்தை 4 கோடி வரை உயர்த்தியுள்ளார் என தகவல் வந்துள்ளது.
தற்போது திரிஷா, நயன்தாரா, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பிறகு தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் ஆக Pooja Hegde இருந்து வருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]