2010ஆம் ஆண்டில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நடிகை பூஜா ஹெக்டே ‘முக மூடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் அசத்தலாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது சில முக்கிய தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நடிப்பில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!
1. ஜன நாயகன்
இப்படம் ஒரு அரசியல் சார்ந்த அதிரடி திரைப்படமாகும். இப்படத்தை H. வினோத் இயக்கியுள்ளார். ஜன நாயகன் திரைப்படம் நடிகை பூஜா ஹெக்டே, விஜய்யுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். நடிகை பூஜா ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் – H. வினோத்
- நடிகர்கள் – விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல்
- இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர்
- தயாரிப்பு நிறுவனம் – KVN Productions
- வெளியீட்டு தேதி – ஜனவரி 2026
Bringing the stunning duo back to the big screen once again ♥️
— KVN Productions (@KvnProductions) October 2, 2024
We know you’ve already cracked it, but officially…😁
Welcome onboard @hegdepooja 🔥#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 #Thalapathy69 pic.twitter.com/nzrtMdcw2l
2. ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படமாகும்.
- இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்
- நடிகர்கள் – சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன்
- இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன்
- தயாரிப்பு நிறுவனம் – Stone Bench Creations, 2D Entertainment
- வெளியீட்டு தேதி – 1 மே 2025
3. கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் கொண்ட படமாக உள்ளது. ரஜினிகாந்தின் மாஸ் பாணியில் சக்திவாய்ந்த கதையம்சத்துடன், அவருக்கு பொருத்தமான ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில், எமோஷனல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இப்படம் உருவாகிறது என எண்ணப்படுகிறது. இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்
- நடிகர்கள் – ரஜினிகாந்த், பூஜா ஹெக்டே, நாகார்ஜுனா, சத்யராஜ், ஷ்ருதி ஹாசன்.
- இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர்
- தயாரிப்பு நிறுவனம் – Sun Pictures
- வெளியீட்டு தேதி – 2025
Yes, you guessed it right!❤️🔥 @hegdepooja from the sets of #Coolie @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv@girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/SThlymSeog
— Sun Pictures (@sunpictures) February 27, 2025
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]