Home Cinema News ‘THALAIVAR 171’-ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான 2 பிரபலங்கள்!

‘THALAIVAR 171’-ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான 2 பிரபலங்கள்!

'தலைவர் 171' படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, இப்படத்தில் நடிக்க 2 பிரபலங்கள் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’, நெல்சன் இயக்கும் ‘ஹுக்கும்’ (ஜெயிலர் 2) ஆகிய மூன்று படங்கள் இருக்கிறது.

MV5BMDViN2U2MDUtNWI0NS00NzBmLTgwMmQtNDJhMWMyNjIwYjYyXkEyXkFqcGdeQXVyMTQ0NTA1NzY5. V1

இதில் ‘தலைவர் 171’ படத்துக்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார்,  கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.  இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்க திட்டமிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நடிகர் சத்யராஜும், நடிகை ஸ்ருதி ஹாசனும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், வெளியான ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் இயக்குநர் லோகேஷும், ஸ்ருதியும் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

THALAIVAR 171’-ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான 2 பிரபலங்கள்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.