Home Cinema News பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

by Sivaanantham RB

தமிழில் பல படங்களில் வில்லனாக வலம் வந்து மிரட்டியவர் டேனியல் பாலாஜி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல நடிகை ராதிகாவின் ‘சித்தி’ சீரியலில் தான் ‘டேனியல்’ என்ற கேரக்டரில் அறிமுகமாகி அசத்தினார்.

அதன் பிறகு டேனியல் பாலாஜிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. இவர் தனுஷின் ‘காதல் கொண்டேன், பொல்லாதவன், வடசென்னை’, சூர்யாவின் ‘காக்க காக்க’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு‘, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’, விஜய்யின் ‘பைரவா, பிகில்’, சந்தீப் கிஷனின் ‘மாயவன்’ போன்ற பல படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் சூப்பராக நடித்து ஆடியன்ஸிடம் லைக்ஸ் குவித்தார்.

இவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2009-ஆம் தமிழில் வெளியான ‘முத்திரை’ என்ற படத்தில் டேனியல் பாலாஜி ஹீரோவாக நடித்திருந்ததார்  இந்த படத்தை பிரபல காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென நடிகர் டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி (வயது 48) இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.