Home Cinema News அட்லீ இயக்கப்போகும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா?

அட்லீ இயக்கப்போகும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா?

by Sivaanantham RB

டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டுபவர் அல்லு அர்ஜுன். இப்போது இவர் கைவசம் ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் தமிழ் இயக்குநர் அட்லீயின் படம் என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது.

இதில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை முன்னணி இயக்குநர் சுகுமார் அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார்.  இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அட்லீ இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கவிருக்கிறார்.

allu arjun samantha

இந்த படத்துக்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார். தற்போது, இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க  பிரபல நடிகை சமந்தாவிடம்  பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் ‘S/O சத்யமூர்த்தி’ (தெலுங்கு) படத்தில் சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்திருந்ததும், ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனமாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங் இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.