Home Cinema News ‘THALAPATHY 69’ஐ இயக்கப்போகும் ஹெச்.வினோத்… மீண்டும் விஜய்யுடன் டூயட் ஆடப்போகும் பிரபல ஹீரோயின்!

‘THALAPATHY 69’ஐ இயக்கப்போகும் ஹெச்.வினோத்… மீண்டும் விஜய்யுடன் டூயட் ஆடப்போகும் பிரபல ஹீரோயின்!

'தளபதி 69' படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

by John Kamalesh


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

popular actress reunite with vijay in thalapathy 69 film

இப்படம் இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத (ஏப்ரல்) இறுதியில் வரும் என்று சொல்லப்படுகிறது.

‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் தான் ‘தளபதி 69’ஐ இயக்கப்போகிறாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதில் விஜய்-க்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ‘மெர்சல், தெறி, கத்தி’ ஆகிய மூன்று படங்களில் தளபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.