Home Cinema News கமல்ஹாசனின் ‘Thug Life’-ல் ‘ஜெயம்’ ரவிக்கு பதிலாக ஒப்பந்தமான பிரபல மலையாள ஹீரோ!

கமல்ஹாசனின் ‘Thug Life’-ல் ‘ஜெயம்’ ரவிக்கு பதிலாக ஒப்பந்தமான பிரபல மலையாள ஹீரோ!

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும் – டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமும் மெகா ஹிட்டான ‘நாயகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் ‘Thug Life’. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானபோதே ஆடியன்ஸுக்கு இதன் மீதான எக்ஸ்பெக்டேஷன் உச்சத்திற்கு சென்று விட்டது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னணி இசையமைப்பாளரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

முதலில் இதில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் துல்கர் சல்மான், ‘ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், நாசர் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி ஆகியோர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின், இதன் ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. 

இதற்கிடையில் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டதால், நடிகர்கள் துல்கர் சல்மானும், ‘ஜெயம்’ ரவியும் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்த தேதிகளில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நடக்காமல் போனது. இதனால், அவர்கள் இருவருமே இப்படத்திலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு பதிலாக அந்த ரோலில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, ‘ஜெயம்’ ரவி நடிக்கவிருந்த ரோலில் நடிக்க பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.