Home Cinema News 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்த சீரியலுக்கு எண்டு கார்டு போடும் SUN TV!

1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்த சீரியலுக்கு எண்டு கார்டு போடும் SUN TV!

சன் டிவியில் 'அன்பே வா' சீரியல் 2020-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி முதல் தற்போது வரை 1089 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

by Naveen Dhayalan

பிரபல டிவி சேனலான சன் டிவியில் தினமும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘அன்பே வா‘. இந்த சீரியல் 2020-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி முதல் தற்போது வரை 1089 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  

இதில் டெல்னா டேவிஸ், விராட் லீட் ரோல்களில் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீகோபிகா நீலநாத், கன்யா பாரதி, செந்தில்நாதன், ஆனந்த், குகன் சண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதனை இயக்குநர் மணிபாரதி இயக்கி வருகிறார்.

தற்போது, இந்த சீரியல் முடிவடையப்போவதாகவும், இதன் க்ளைமேக்ஸ் காட்சியின் ஷூட்டிங்கும் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக ‘மல்லி’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகப்போகிறதாம்.

இதன் ப்ரோமோ நேற்று முன் தினம் (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இதில் டைட்டில் ரோலில் நிகிதா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் விஜய் வெங்கடேசன், துஷிதா, அக்ஷயா மோகன் குமார், கிருத்திகா அண்ணாமலை ஆகியோர் நடிக்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.