Home Cinema News பிரபாஸ் – கமல்ஹாசன் மோதும் மெகா பட்ஜெட் படமான ‘KALKI 2898 AD’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் – கமல்ஹாசன் மோதும் மெகா பட்ஜெட் படமான ‘KALKI 2898 AD’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் - கமல்ஹாசன் சேர்ந்து நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi
GChhlQrbMAAl6qn

டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸ், ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கிக் கொண்டிருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தில் வில்லனாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. முதலில் இப்படத்தை வருகிற மே 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பின், ரிலீஸை மே 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

தற்போது, இப்படம் இந்த ஆண்டு (2024) ஜூலை 12-ஆம் தேதி தான் ரிலீஸாகப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கின்றனர்.

கமல்ஹாசன் – பிரபாஸ் இணைந்து நடிப்பதாலும், கடந்த ஆண்டு (2023) வெளியிடப்பட்ட இதன் GLIMPSE அட்டகாசமாக இருந்ததாலும் இந்த படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் உச்சத்தில் இருக்கிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.