தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளரான உப்பளபதி சூர்யா நாராயண ராஜு என்பவரின் மகனாக 1979-ல் பிறந்தார் பிரபாஸ். பள்ளிப் படிப்பை சென்னை டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பீமாவரத்தில் உள்ள DNR உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பின்னர் ஹைதராபாத் நாளந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். ஹைதராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் இளங்கலை தொழில்நுட்பத்தில் B.Tech முடித்தார். இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள சத்யானந்த் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஆரம்ப சினிமா வாழ்க்கை
சிரஞ்சீவி அவர்களின் நடிப்பை பார்த்து சிறு வயது முதலே சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவில் வளர்ந்து வந்தார் பிரபாஸ். முதல் படமே ஹீரோவாக நடிக்க பிரபாஸிற்கு வாய்ப்பு தேடி வந்தது.
ஜெயந்த் பரஞ்சீ இயக்கத்தில் ஈஸ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் ராகவேந்திரா, வர்ஷம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தார். வர்ஷம் படத்தில் திரிஷா, கோபிசந்த் ஆகியோர் நடிப்பில் அந்த ஆண்டில் பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது.
2005-ல் நடித்த சக்ரம் படத்திற்கு நந்தி விருதை பெற அடுத்து SS. ராஜமௌலியின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சத்ரபதி என பெயரிடப்பட்ட படத்தில் பிரபாஸ், ஸ்ரேயா சரண், ஷாபி, பானு பிரியா, பிரதீப் ராவத் போன்றோர் நடித்திருந்தனர்.
100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி நல்லவரவேற்பை பெற்றது. பிலிம்பேர் சிறந்த நடிகர் தெலுங்கு பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வர 2007-ல் அஜித் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆனா பில்லா படத்தின் தெலுங்கு ரிமேக் படத்தில் நடித்தார்.
இந்தியா சினிமாவின் பிரமாண்ட படைப்பு
2015 -ல் SS. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா ஆகியோர் நடிப்பில் பிரமாண்ட படைப்பாக கருதப்பட்ட பாகுபலி வெளியானது.
இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் ஒரு கற்பனை கதையை நிஜமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் ராஜமௌலி. அதற்க்கு பிரபாஸ் உயிர் தந்து இந்திய சினிமாவின் பெருமையை காலத்திற்கும் சொல்லும் படியாக இவர்கள் கூட்டணி இருந்தது.
2015-ல் பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து 2017 -ல் பாகுபலி 2-வது பாகம் வெளியானது. பிரபாஸ் இந்த படத்திற்க்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீரன், தைரியசாலி என்று உதாரணத்திற்கு பாகுபலி என்று குறிப்பிட்டு பேச தொடங்கினர். இந்த படத்திற்கு பிறகு பாகுபலி என்றாலே ஒரு வித மன தைரியத்தை ஏற்படுத்தக்கூடிம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுந்தது.
பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டு படங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 2500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்க்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பிரபாஸ் நடித்த பாகுபலி கேரக்டர் தான்.
பாகுபலி படத்திற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்தும் பிரமாண்ட படைப்பாகவே பிரபாஸ்க்கு இருந்தது. 2019-ல் சாகோ, 2022-ல் ராதே ஷியாம், 2023-ல் ஆதிபுருஷ், Salaar, 2024-ல் கல்கி 2898 AD என இடைவெளி விட்டு படங்களில் நடித்துவருகிறார்.
எதிர்கால படைப்பாக கருதப்படும் கல்கி படமும் பான் இந்தியா ஸ்டார் நடிகர்களான அமிதாப் பச்சன், கமல் ஹாசன் போன்றோர் நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று 1000 கோடி வரை வசூல் செய்தது.
தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து மற்ற மொழிகளில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வந்த பிரபாஸ் பான் இந்தியா நடிகராக அனைவரும் கொண்டாடும் வகையில் புகழின் உச்சியில் இருந்தது வருகிறார்.
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் |
பாகுபலி 1 | 10 ஜூலை 2015 | பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, நாசர் |
பாகுபலி 2 | 28 ஏப்ரல் 2017 | பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, நாசர் |
சலார் | 22 டிசம்பர் 2023 | பிரபாஸ், பிரிதிவிராஜ், பாபி சிம்ஹா, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, ஷ்ரயா ரெட்டி |
கல்கி 2898 AD | 27 ஜூன் 2024 | பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, கமல் ஹாசன், பசுபதி, திஷா பதனி |