Prabhu, Khushbu காம்போவில் வெளியான படங்கள்.
90-களில் தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்பட்டு வந்தவர்கள் Prabhu மற்றும் Khushbu. பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்த குஷ்பு பெரும்பாலான படங்களில் பிரபுவுடன் நடித்து வந்தார். இவர்களது காம்போ சூப்பர் ஹிட் படங்களை தந்து வந்தது.
தர்மத்தின் தலைவன்(1988):

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரிப்பில் 1988-ல் ரஜினிகாந்த், Prabhu, சுஹாசினி, குஷ்பு, நாசர், வி.கே. ராமசாமி, சார்லி வெளிவந்து பெரும் வெற்றியை பெற்றது. இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய “தென்மதுரை வைகை நதி” பாடல் இன்றளவும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. குஷ்புவிற்கு தமிழ் சினிமாவில் முதல் படமாகும். சிறந்த இசையமைப்பாளராக சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது. பிரபு மற்றும் குஷ்பு முதல் படமும் கூட.
வெற்றி விழா(1989):

நடிகர் பிரதாப் அவரின் இயக்கத்தில் 1989-ல் கமல் ஹாசன், பிரபு, குஷ்பூ, சசிகலா, ராதா ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி விழா. இந்த படம் ராபர்ட் லுட்லம் எழுதிய “The Bourne Identity” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இளையராஜா இசையில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் படம் வெளியானது. கமல் ஹாசனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் குஷ்பூ ஜோடி நடித்திருப்பார்கள். 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் கலக்கியது.
மை டியர் மார்த்தாண்டன்(1990):

1990-ல் பிரதாப் இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மற்றுமொரு காமெடி படம் “மை டியர் மார்த்தாண்டன்”. Prabhu, குஷ்பு, கவுண்டமணி, எஸ்.எஸ். சந்திரன், நிழல்கள் ரவி, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. மன்னர் பரம்பரையை சேர்ந்த பிரபு சொந்த ஊரை விட்டு வந்து விடுவார். பின்னர் கவுண்டமணி உதவி செய்வதை நகைச்சுவையாக காட்டியிருப்பார். “ஐடியா மணி” கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். இளையராஜா இசையமைத்திருப்பார். படம் ரிலீஸ் ஆனா சமயம் ஓரளவு மட்டுமே ஓடியது.
சின்னத்தம்பி(1991):

பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையில் 1991-ல் பிரபு, குஷ்பு கூட்டணியில் வெளிவந்து மிக பெரிய வெற்றியை பெற்ற படம் “சின்ன தம்பி”. வெகுளித்தனமான Prabhu நடிப்பு, பணக்கார வீட்டில் பிறந்த குஷ்பு, முரட்டு தனம் கொண்ட குஷ்புவின் அண்ணன்கள், கவுண்டமணியின் காமெடி என படம் முழுவதும் ரசிக்கும்படியாக எடுத்திருப்பார். ராதா ரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், பாண்டு நடித்திருந்தனர். 1 வருடத்திற்கும் மேல் சில தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது. பிரபு மற்றும் குஷ்பு ஆகியோரின் சினிமா வாழ்வில் மிக முக்கிய படமாக இது இருந்துள்ளது.
கிழக்குக்கரை(1991):

சின்ன தம்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே ஆண்டில் பிரபு, குஷ்பு, பி. வாசு கூட்டணியில் வெளிவந்த படம் கிழக்குக்கரை. சந்திரசேகர், கவுண்டமணி, விஜயகுமார், ஸ்ரீவித்யா, வெண்ணிறாடை மூர்த்தி தேவா இசையமைத்திருந்தார்.
பாண்டித்துரை(1992):

மனோஜ் குமார் இயக்கத்தில், இளையராஜா இசையமைக்க, கே.பி. பிலிம்ஸ் தயாரிப்பில் 1992-ல் வெளியான படம் பாண்டித்துரை. Prabhu, குஷ்பு, ராதா ரவி, மனோரம்மா, சுமித்ரா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிய அளவில் வெற்றி பெற்று பின்னர் தெலுங்கு, கன்னட, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
மறவன்(1993):

பாண்டித்துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு, குஷ்புவை வைத்து மீண்டும் மனோஜ் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மறவன். விஜயகுமார், சுமித்ரா, நெப்போலியன், வடிவேலு, தியாகு, சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபு போலீஸ் ஆஃபீஸ்ராக நடித்திருப்பார். அரசியல் பின்புலம் கொண்ட நெப்போலியன் மற்றும் அவரது அப்பாவின் கண்ட்ரோலில் இருக்கும் கிராமத்தை பிரபு காப்பாற்றினாரா என்பது தான் கதை.
உத்தமராசா(1993):

ராஜ் கபூர் இயக்கத்தில், கே. பாலு தயாரிப்பில், இளையராஜா இசையமைக்க பிரபு, குஷ்பு கூட்டணியில் 1993-ல் வெளிவந்தது உத்தம ராசா. ராதா ரவி, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோரும் நடித்திருந்தனர்.
தர்மசீலன்(1993):

செயார் ரவி இயக்கத்தில், அனந்தி பிலிம்ஸ் தயாரிப்பில்,இளையராஜா இசையமைக்க 1993-ல் வெளிவந்த படம் தர்மம் சீலன். பிரபு, குஷ்பு, நெப்போலியன், கீதா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியானது. வெளியான போது ஓரளவு மட்டுமே வரவேற்பை பெற்றது.
நாளைய செய்தி(1992):

ஜி.பி. விஜய் இயக்கத்தில் 1992-ல் பிரபு, குஷ்பு, ஜெய் கணேஷ், ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் நாளைய செய்தி. ஆதித்யன் இசையமைத்திருந்தார். படம் ரிலீஸ் அகி ஓடவில்லை.
சின்ன வாத்தியார்(1995):

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வித்தியாசமான கதையான “கூடு விட்டு கூடு பாயும்” விசயத்தை வைத்து காமெடியாக எடுத்திருப்பார். பிரபு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். குஷ்பு, ரஞ்சிதா, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்றோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்கருவை கொண்டு எடுத்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]