Home Cinema News பிரபு தேவாவின் பர்த்டே ஸ்பெஷல்… ‘The GOAT’ன் புது போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

பிரபு தேவாவின் பர்த்டே ஸ்பெஷல்… ‘The GOAT’ன் புது போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

by Sivaanantham RB

கோலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் இப்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும், விஜய்யின் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ல் மிக முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இன்று நடிகர் பிரபு தேவாவின் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் புதிய போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.