Home Cinema News Prabhu Deva-வின் “பேட்ட ராப்” பட அப்டேட்…

Prabhu Deva-வின் “பேட்ட ராப்” பட அப்டேட்…

டான்ஸ்- ல் கலக்கும் பிரபு தேவாவின் படங்கள் சமீபகாலமாக சரியான வரவேற்பை பெறாத நிலையில் "பேட்ட ராப்" படம் ஒரு காம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம். 

by Sudhakaran Eswaran

டான்ஸ்- ல் கலக்கும் Prabhu Devaவின் படங்கள் சமீபகாலமாக சரியான வரவேற்பை பெறாத நிலையில் “பேட்ட ராப்” படம் ஒரு காம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.   

2000  காலகட்டத்தில் நடிப்பு, நடனம் என இரண்டிலும் ரசிகர்களை கவர்ந்து தற்போது இந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத “டான்ஸ் மாஸ்டர்” ஆக வலம்வந்து கொண்டிருப்பவர் Prabhu Deva. சமீபத்தில் இவரின் நடிப்பில் வந்த மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, பஃஹீரா போன்ற படங்கள் ஓரளவு மட்டுமே  வரவேற்பை பெற்றது.     

Untitled design 15 1

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் GOAT படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். “ஜாலியோ ஜிம்கானா” என்ற  தலைப்பு கொண்ட படத்தை சக்தி சிதம்பரம் இயக்க பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் உடன் Prabhu Deva நடிக்க இருக்கிறார். 

தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை S.J. சினு இயக்க பிரபு தேவா மற்றும் நாயகியாக வேதிகா நடிக்க படத்தின் பெயர் “பேட்ட ராப்” என்று வைத்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். “புளூ ஹில் பிலிம்ஸ்” தயாரிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. 

Untitled design 16 1

தயாரிப்பாளராக ஜோபி பி சாம் இந்த படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்க விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மீம் கோபி ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கான ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான “டிசீரிஸ்” கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. இதுவரை இல்லாத வகையில்  படத்தில் சுமார் 10 பாடல்கள் இருக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

“பேட்ட ராப்” படத்தில் “பாட்டு அடி, ஆட்டம் Repeat” என்ற வரியில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இத வைத்து பார்க்கும் போது பாடல் அனைத்தும் கலக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.