Home Cinema News ரீல்ஸுக்கு நோ… சினிமாவுக்கு ஓகே… ஹீரோயினாகும் Prabhu Solomon மகள்!

ரீல்ஸுக்கு நோ… சினிமாவுக்கு ஓகே… ஹீரோயினாகும் Prabhu Solomon மகள்!

‘மைனா’, ‘கும்கி' படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்குள் சிறந்த இயக்குநராக அடையாளம் பெற்றவர் Prabhu Solomon.

by Santhiya Lakshmi

‘மைனா’, ‘கும்கி’ படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்குள் சிறந்த இயக்குநராக அடையாளம் பெற்றவர் Prabhu Solomon. ஆனால், சமீபமாக இவரைவிடவும் இவரது மகள் ஹேசல் ஷைனிதான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். காரணம் ஹேசல் ஷைனி சோஷியல் மீடியா ஸ்டாராக இருப்பதுதான். 

Snapinsta.app 442467404 7580918505362231 3110694252731765217 n 1080

சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘டிக் டாக்’ பிரபலமாக இருந்த காலத்தில் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடலுக்கு டிக் டாக் செய்து வைரல் ஆனார் ஹேசல் ஷைனி. இதன் பிறகு இவர் போடும் ஒவ்வொரு வீடியோவும் வைரலாக இவரை பேட்டி எடுக்க முண்டியடித்தன மீடியாக்கள். ஆனால், மகளின் டிக்டாக் ஆர்வத்தின் மீது கடுப்பில் இருந்த பிரபு சாலமன் மீடியாக்களின் கவனம் ஹேசலின் மீது குவிவதை விரும்பவில்லை. கிறிஸ்தவரான பிரபு சாலமன் மகள் சினிமா ஊடகத்துக்குள் நுழைய வேண்டாம் என நினைத்தார். ஆனால், ஹேசல் விடுவதாக இல்லை. தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யு-ட்யூப் என சமூக வலைத்தளங்கில் தனது ரீல்ஸ், ஷாட்ஸ் மூலம் பிரபலமாக, இப்போது மகளின் விருப்பத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் Prabhu Solomon. 

அடுத்து அவர் இயக்கயிருக்கும் புதிய படத்தில் ஹேசல் ஷைனிதான் ஹீரோயின். வனிதா விஜயகுமார் – ஆகாஷின் மகன் விஜய் ஶ்ரீஹரிதான் ஹீரோ. படத்துக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.